scorecardresearch

சூர்ய வம்சம் படத்தை நேர்ல பாத்த மாதிரியே இருக்கு.. அப்படி என்னதான் செய்தார் விஜே மணிமேகலை?

ஹூசைன் பிறந்தநாளை முன்னிட்டு, தன் கணவனுக்கு பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை பரிசாகக் கொடுத்துள்ளார் மணிமேகலை!

VJ Manimegalai
VJ Manimegalai gifted BMW Bike for her husband Hussain on his birthday

சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.

பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி ஆன மணிமேகலை’ கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவரது படபட பேச்சு ரசிகர்களுக்கு பிடித்தது. இப்போது மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொண்டுள்ளார்.

ஏற்கெனவே மணிமேகலை, ‘ஹூசைன் மணிமேகலை’ பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில்’ இவர் சமைக்கும் போது குக்கர் வெடித்த வீடியோ பயங்கர வைரலாகியது.

மணிமேகலை சில மாதங்களுக்கு முன், புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கினார். பிறகு சில நாட்களிலே மற்றொரு காரும் வாங்கி அதையும் இன்ஸ்டாவில் பகிர்ந்தார். மேலும் தங்கள் சொந்த ஊரில்’ மணிமேகலையும், ஹூசைனும் 2 ஏக்கரில் சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கினர். அதை ஏற்கெனவே இருவரும் யூடியூப் வீடியோவில் கூறினர். மேலும் சென்னையில் பழைய வீட்டை காலி செய்துவிட்டு, அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீட்டில் குடியேறினர்.

இப்போது புதிய செய்தி என்னவென்றால், ஹூசைன் பிறந்தநாளை முன்னிட்டு, தன் கணவனுக்கு பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை, தன்னுடைய யூடியூப் சேனலிலும் பகிர்ந்துள்ளார்.

வீடியோ ஆரம்பிக்கும் போது மணிமேகலை, உசைன் பிறந்த நாளுக்கு பைக் கிஃப்ட் கொடுக்க போறேன்னு  சொன்னேன். ஆனா அவன் நம்பல. இன்னைக்கு ஜூன் 1, 2022. ரொம்ப நல்ல நாள். இன்னைக்குத் தான் நம்ம பிஎம்டபிள்யூ பைக் வாங்குறோம்.

வண்டிக்கு அஸ்ஸசரீஸ் மாட்டிட்டு இருக்காங்க. அதனால வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என பேசிக் கொண்டிருந்த மணிமேகலை, ஷோரூமில் ஒரு பைக்கை பார்த்து, முதல்ல வரும்போது இந்த பைக்தான் பார்த்தோம். பார்க்க நல்லா இருக்கு. இதைய எடுத்துக்கலாம்னு நினைச்சோம். அப்படியே இந்த பக்கம் பாத்தா, இந்த பைக் நிப்பாட்டி வச்சுருந்தாங்க. பாக்குறதுக்கு உயரமா பெரிசா இருக்க மாதிரி இருந்தது. சரி இது நல்லா இருக்கு, இதுவே வாங்கலாம்னு இந்த பைக் புக் பண்ணோம் என்று பேசுகிறார்.

பிறகு பைக்கர் அணியும் சூட்ஸ் பக்கத்தில் போய் நின்ன மணிமேகலை, இந்த டிரெஸ சும்மா தொங்க விட்டுருக்காங்க. ஆனா, இதோட விலை 2 லட்ச ரூபாய். நம்ம வாங்குற பைக்ல பாதி விலைய சொல்றாங்க.

பிறகு மணிமேகலை, ஒரு பைக் வாங்கிறது முக்கியம் இல்ல. அது பத்திரமா வச்சுக்கிறதும் முக்கியமில்லை. அதை கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும். பைக்ல ஏறதுக்குனு ஒரு ஸ்டைல் இருக்குனு ஹூசைனுக்கு பாடம் எடுத்துக் கொண்டே, பைக்கில் ஏறி உட்கார, கால் கீழே எட்டவில்லை. அதைப் பார்த்து உசைன் கிண்டல் செய்கிறார்.

பிறகு பைக் ரெடி ஆகி வந்ததும், அதை உசைனுக்கு கிஃப்டாக கொடுத்து, நல்ல பத்திரமா ஓட்டு, பெட்ரோல் போடுறதுக்கு மறக்குறீயோ, இல்லையோ, தயவுசெய்து நம்ம வீட்டுல மட்டுமே இந்த வண்டிய நிப்பாட்டுவனு சத்தியம் வாங்கிட்டு வண்டிய ஹூசைனிடம் ஒப்படைத்தார்.

பிறகு மணியும், ஹூசைனும் பைக் வாங்கியதை அங்கேயே கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து பாடிகார்ட் முனீஸ்வர் கோயிலுக்கு சென்று, புது பைக்-கு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

இதுவரை 8 லட்சத்துக்க்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். அதைப் பார்த்த பலரும், உசைன்’ மணிமேகலை மாதிரி மனைவி அமைந்ததுக்கு நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் என வாழ்த்தி வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர், சூர்ய வம்சம் படத்தை நேர்ல பாத்த மாதிரியே இருக்கு என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vj manimegalai gifted bmw bike for her husband hussain on his birthday