vj manimegalai husband hussain manimegalai life - வீட்டை எதிர்த்து திருமணம்; கணவருக்கு புது பைக்; ஓய்வில்லா உழைப்பு - அசத்தும் மணிமேகலை
பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான ஹுசைனை திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.
Advertisment
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
Advertisment
Advertisements
காதலிக்கத் தொடங்கிய பின்னர் இருவரும் தங்களது காதலை வீட்டில் தெரிவித்து திருமணம் செய்வதாக கூறி இருந்தார்கள். ஆனால் ஹுசைன் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும் பெற்றோர்கள் துணை இல்லாமல் மிகவும் வாழ்வில் கஷ்டப்படுவதாக மணிமேகலை பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.
அதில், "இப்போது நாங்கள் எங்களது வீட்டில் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்தபடி ஒரு நல்ல நிலைமைக்கு நாங்கள் இன்னும் செல்லவில்லை. எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் அவர்களிடம் நிச்சயம் பேச முயல்வோம். இப்போது நாங்கள் பேசினால் நாங்கள் அவர்களிடம் ஏதாவது எதிர்பார்க்கிறோம் என்று அவர்கள் தவறாக நினைக்க வாய்ப்புண்டு. பாசம் இல்லாமல் ஒன்றும் இல்லை, பேசவேண்டும் என்ற ஆசைகூட இருக்கிறது. நல்ல நிலைமைக்கு வந்ததும் கண்டிப்பாக பேச முயற்சி செய்வோம்.
முன்பெல்லாம் சாப்பாட்டை அதிகம் வீணாக்கிய நான், இப்போது கொஞ்சம் கூட வீணாக்குவதே இல்லை. அப்படியே மிஞ்சினாலும் இல்லாதவர்களுக்கு கொடுத்து விடுவேன் அதோட அருமை எனக்கு நிச்சயம் புரியும்" என்று மிகவும் உருக்கமாக பேசி இருந்தார்.
இத்தனை சிரமங்களையும் தாண்டி மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் மணிமேகலை மற்றும் ஹுசைன் தம்பதியினர் புதிதாக ஒரு கேடிஎம் 200 சிசி பைக்கை சமீபத்தில் வாங்கியுள்ளனர். இதன் விலை 2 லட்சமாம்.
தவிர, தொடர்ந்து இருவரும் தங்கள் பணிகளில் மிகவும் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர்.
எந்த பெற்றோர் தங்களை எதிர்த்தார்களோ, அதே பெற்றோர் முன் பெரிதாக வாழ்ந்து காட்டி, மீண்டும் அவர்களுடன் இணைய வேண்டும் என்பதே இந்த ஜோடியின் ஏக்கம், கனவு எல்லாம்!.