சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.
பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி கொடுத்த மணிமேகலை’ கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவரது படபட பேச்சு ரசிகர்களுக்கு பிடித்தது.
பிறகு மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் மணிமேகலை ஒரு போட்டியாளராக தன் கணவனுடன் கலந்து கொண்டார். அதில் இவர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அதன்பிறகு மணிமேகலை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவராக மாறிவிட்டார். ஆனால் இவர் தமிழகம் முழுவதும் வைரலானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.
தற்போது மணிமேகலை ரியாலிட்டி ஷோ, யூடியூப் என பிஸியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் 34 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மணிமேகலையை பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மணிமேகலை இப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
அதில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து பாடிய பட்டக் பட்டக் பாடலுக்கு, அவருடன் சேர்ந்து மணிமேகலையும், ஹூசைனும் வைப் செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
'சூரரைப் போற்று' படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு தேசிய விருது கிடைத்தது. இப்போது ஜி.வி’ பட்டக் பட்டக் எனும் ஒரு நிமிட பாடலுக்கு இசையமைத்து, நடனமும் ஆடியுள்ளார். அதில் தேஜூ அஷ்வினி அவருக்கு ஜோடியாக ஆடியுள்ளார்.
அந்த பாடலுக்கு தான் இப்போது மணிமேகலையும், ஹூசைனும் ஜி.வி உடன் சேர்ந்து வைப் செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.