பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகள், பழங்கள், பாசி பயறு மாவு, கடலை மாவில் இருந்து நானே ஃபேஸ் மாஸ்க் தயாரித்து, அதை முகத்துக்கு அப்ளை பண்ணுவேன்.
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் விஜே பார்வதி. ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, தன்னுடைய அழகு பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
”நம்முடைய கிச்சன்லேயே தோல் பராமரிப்புக்கு தேவையான நிறைய நல்ல விஷயங்கள் இருக்குது. தயிர், பாலாடை, தக்காளி, தேன் இதெல்லாம் நம்ம தோலுக்கு ரொம்ப நல்லது. முக்கியமா அரிசி தண்ணீர் ரொம்ப நல்லது.
பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகள், பழங்கள், பாசி பயறு மாவு, கடலை மாவில் இருந்து நானே ஃபேஸ் மாஸ்க் தயாரித்து, அதை முகத்துக்கு அப்ளை பண்ணுவேன். தோல் ஹைட்ரேட் ஆக இருக்க நிறைய தண்ணீர் குடிக்கிறேன்.
தூங்குவதற்கு முன், இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாக தேய்த்து கண்களில் ஒத்தி கொடுப்பேன். ஏதாவது ஒரு மாய்ஸ்சரைஸர் எடுத்து கண்களை சுற்றி மசாஜ் செய்தால், கருவளையங்கள் வராது. தூக்கமும் நன்றாக வரும்.
வெளியே போகும் போது, கிளென்சர், டோனர், சன்ஸ்கீரின் போடுவேன். அதேபோல முடிக்கு முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் அப்ளை பண்ணா நல்ல சில்கியாகவும், ஸ்ட்ரெயிட்டாவும் இருக்கும்.
வீட்டுல சாப்பாட்டுக்கு அரிசி ஊறவைக்கும் போது அந்த தண்ணீரை எடுத்து, ஸ்ப்ரே பாட்டில்ல ஊற்றி, ஃப்ரிட்ஜில வச்சுருவேன், காலையில் எழுந்த உடனே முகம் கழுவிய பிறகு அந்த ஸ்ப்ரேயை முகத்தில பயன்படுத்துறது ரொம்ப நல்லது.
இரவு உணவை தினமும் இரவு 6 மணிக்கு முடித்து விடுவேன். தினமும் இருமுறை க்ரீன் டீ சாப்பிடுவேன்.
இது எல்லாத்தையும் விட முக்கியமாக நான் எப்போதும் சந்தோஷமா இருப்பேன். பக்கத்துல இருக்கிறவங்களையும் மகிழ்ச்சியா வச்சுக்குவேன். ஓய்வு நேரங்களில் எனக்கு பிடித்த விஷயங்களை செய்வேன்”.
இப்படி பார்வதி தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து நிறைய விஷயங்களைஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“