பிக்பாஸ் சீசன் 7, அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது.இதில் ரவீனா தாஹா, வினுஷா தேவி, மணி சந்திரா, கூல் சுரேஷ், பூர்ணிமா, வனிதா மகள் ஜோவிகா என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Advertisment
பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் சீசன் 5ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை தட்டிச் சென்றார்.
மேலும் பிரியங்கா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் தன் அம்மாவுடன் சேர்ந்து பிக்பாஸ் சீசன் 7 லாஞ்சிங் எபிசோட் பார்க்கும் வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
சீசன் 5ல நீங்க என்னை டிவியில பார்க்கும் போது எப்படி இருக்கும்?
ரொம்ப பெருமையா இருக்கும். கடைக்கு போகும் போது மக்களை பார்க்கும் போது எல்லாரும் பிரியங்கா தான் ஜெயிப்பா சொல்லுவாங்க.
அங்க நீ சாப்பிடாம கஷ்டப்படும் போது புரொடக்ஷன்க்கு கால் பண்ணி கொஞ்சம் சோறு அதிகமா பண்ணுங்க. வெறும் சோறு இருந்தா கூட அவ ஊறுகாய் போட்டு சாப்பிடுவா சொல்லலாம் நினைப்பேன். ஆனா நம்ம வெளியே இருந்து எதுவும் பண்ண முடியாது…
பிபி வீட்டுல நீ சமைச்சு நான் பாக்கவே இல்ல. ஆனா 2, 3 தடவ பாத்திரம் கழுவி பார்த்தேன்..
வீட்டுல ஒரு ஸ்பூன் கூட கழுவமாட்ட. ஆனா அங்க பாத்திரம் கழுவுறதை பார்க்கும் போது குழந்தையோட நகம் எல்லாம் எப்படி இருக்கும், கஷ்டமா இருந்தது, என்று பிரியங்கா அம்மா பல விஷயங்களை அந்த வீடியோவில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“