/indian-express-tamil/media/media_files/Vckw8jsL9VK28sOCshdO.jpg)
Priyanka Deshpande
பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்காவுக்கு ரோகித் என்ற தம்பி உள்ளார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரியங்காவுக்கு அந்த குழந்தைதான் உலகம்.பிரியங்கா, மருமகள் இகா உடன் இருக்கும் படங்கள், வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.
இப்போது மருமகளுக்காக சர்பிரைஸ் கொடுத்த வீடியோவை பிரியங்கா தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
நான் ஊ சொல்றியா உ ஊம் சொல்றியா நிகழ்ச்சியில பல பொருட்களை ஜெயிச்சேன். நான் ரொம்ப ஆர்வமா எதுக்கு இந்த வீடியோ பண்றேனா, இகா முகத்துல நிறைய சந்தோஷத்தை பார்க்க போறேன். அவளுக்கு ஒரு சூப்பரான கிஃப்ட் வச்சுருக்கேன் என்று ஷோவில் ஜெயித்த பபுள்ஸ் பாக்ஸை பிரியங்கா காட்டுகிறார்.
தொடர்ந்து, புதிதாக வொர்க் அவுட் ஆரம்பிக்கும் வீடியோவையும் பிரியங்கா இத்துடன் பகிர்ந்துள்ளார்.
இன்னைக்கு முதல் நாள் நான் வொர்க் அவுட் ஆரம்பிக்கிறேன். எனக்கு ஏப்ரல்ல 32 வயசு முடிய போகுது. என்னோட பிறந்த நாளைக்கு நான் ஒரு 5 கிலோ குறைப்பேன். இப்போ நான் 79 கிலோ இருக்கேன்.
அதை அப்படியே 75க்கு கொண்டு வர்றோம். இப்படி பல விஷயங்களை பிரியங்கா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.