/indian-express-tamil/media/media_files/2025/08/13/vj-priyanka-2025-08-13-17-27-52.jpg)
VJ Priyanka
வி.ஜே. பிரியங்கா என்றாலே, தமிழ்நாட்டு வீடுகளில் ஒரு குதூகலம் வந்துவிடும். தன் கலகலப்பான பேச்சாலும், துள்ளலான சிரிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். சமீபத்தில் நடைபெற்ற ஜே.எஃப்.டபிள்யூ அச்சீவர்ஸ் விருதுகள் வழங்கும் விழாவில், தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்காவுக்கு, தொலைக்காட்சி பொழுதுபோக்குக்கான சிறந்த பங்களிப்புக்காக விருது வழங்கப்பட்டது மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
தன் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசாத பிரியங்கா, இந்த நிகழ்ச்சியில் தன் கணவர் வசீகரன் பற்றி மனம் திறந்து பேசினார்.
"என் வாழ்க்கையில காதல் தானாகத்தான் வந்துச்சு. அதைத் தேடி நான் எங்கேயும் போகலை. காதல் கிடைக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் அடிபட்டாத்தான், அதோட அருமை புரியும்னு சொல்லுவாங்க. எனக்குக் கிடைச்ச காதல் அப்படிப்பட்டதுதான்.
குதிரை மேல எல்லாம் என் இளவரசன் வரலை. ஆனால் வந்தான். வந்து 'கல்யாணம் பண்ணிக்கலாமா?'ன்னு கேட்டான். நானும் ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன். ஏன்னா, திடீர்னு கல்யாணம்னு சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. எனக்குள்ள இருக்கிற அந்தப் பொண்ணை முழுமையாக்குறதுக்குனு ஒரு ஆள் இருந்தான், அது என் கணவர் வசிஹரன் சசிதானந்தம்தான். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
ரசிகர்கள் சில பேர் எதிர்மறையாகப் பேசுறாங்க. அதையெல்லாம் கண்டுக்க மாட்டேன். ஆனா, நான் சந்தோஷமா இருக்கேன்னு எனக்கு சந்தோஷப்படுற பத்தாயிரம் பேர் இருக்காங்க. அவங்களுடைய அன்பை நான் சம்பாதிச்சிருக்கேன். அதுதான் எனக்குப் போதும்.
நான் இந்த மேடையில் நின்னு பேசுறதும், என் கணவர் கூட நான் சந்தோஷமா இருக்கிறதும்தான் என் வீட்டுக்குள்ள இருக்கிற சந்தோஷம். என் அம்மா, என் தம்பி, எல்லாருமே சந்தோஷமா இருக்காங்க. அதனாலதான் இது நடக்குது. என்னோட அன்பு ரசிகர்களுக்காக நான் என் வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமா வாழ்வேன்." என்றார் பிரியங்கா.
விருது வழங்கும் நிகழ்ச்சி மேடையிலேயே, பிரியங்காவின் கணவர் வசீகரனுக்குத் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கலகலப்பான உரையாடலின் முடிவில், இருவரும் மாறி மாறி "ஐ லவ் யூ" என்று அன்பைப் பரிமாறிக்கொண்டனர். இந்தத் தருணம், அரங்கத்தில் இருந்த அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.