பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
Advertisment
குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரியங்கா போட்டியாளர்களிடம் பேசுவதை செம ஜாலியாக இருக்கும். இதில் போட்டியாளர்களின் பாடல்களை விட, பிரியங்காவும், மாகாபாவும், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் பார்வையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
போட்டியாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்கள், நடுவர்களையும் பிரியங்கா விடமாட்டார். உன்னி கிருஷ்ணன் முதல் அணுராதா வரை எல்லாரையும் கலாய்த்து தள்ளுவார். அந்தளவுக்கு சூப்பர் சிங்கர் என்றாலே, பிரியங்காவும், மாகாபாவும் தான் என்றாகிவிட்டது.
பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய படங்கள், போட்டோஷூட் என பலவற்றையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் தீபாவளி அன்று அவர் பகிர்ந்த ஒரு வீடியோ இப்போது வைரல் ஆகியுள்ளது.
Advertisment
Advertisements
நான் லண்டனில் இருந்தபோது ஒரு பண்ணைக்கு சென்றிருந்தேன், அது ஒரு அற்புதமான அனுபவம். அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ள நினைத்தேன் என்று அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த பண்ணையில் எல்லா விதமான விவசாயமும் செய்றாங்க. நமக்கு எது தேவையோ நம்மளே போய் எடுத்துக்கலாம் என மக்காச்சோளம், ஃபிரெஞ்ச் பீன்ஸ் என அனைத்தையும் வயலில் சென்று அவரே பறித்துக் கொள்கிறார்.
பிறகு, புளூபெர்ரி, ஆப்பிள் தோட்டம், ப்ளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி என எல்லாம் அந்தந்த தோட்டத்தில் சென்று, அவரே பறித்து பில் போடும் கவுண்டரில் வந்து கொடுக்கிறார்.
பிறகு அங்கிருந்து லண்டன் கடைகளில் ஷாப்பிங் செய்கிறார். அப்போது அங்குள்ள தமிழ் பேசும் குழந்தைகளை சந்தித்த பிரியங்கா அவர்களிடம் இந்த ஊருல எல்லாம் ரொம்ப விலை அதிகமா இருக்கு என புலம்பிக் கொண்டே வீடியோவை முடிக்கிறார்.
இதோ அந்த வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“