VJ Ramya diet plan for long and strong hair growth Tamil News
VJ Ramya diet plan for long and strong hair growth Tamil News : நிகழ்ச்சி தொகுப்பாளினி என்பதையும் தாண்டி உடல்நலம் மற்றும் சரும நலம் சார்ந்த ஏராளமான விஷயங்களை தன்னுடைய யூடியூப் சேனல் வழியாகப் பகிர்ந்து வருகிறார் விஜே ரம்யா. அந்த வரிசையில், ஏற்கெனவே தலைமுடி சிதையாமல் ஆரோக்கியமாக வளர என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதற்கான காணொளியைப் பகிர்ந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தலைமுடி சீராக வளர என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதை தன்னுடைய சரும நிபுணர் தனக்குப் பகிர்ந்தவற்றை நம்மோடும் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
தென்னிந்தியாவில் வசிக்கும் நமக்குக் கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்து தலைமுடியை எப்படிப் பாதுகாப்பது என்பதைப் பற்றி, தன் மருத்துவரிடம் ரம்யா கேட்க, அதற்கு ஏராளமான பயனுள்ள செய்திகளை பகிர்ந்துகொண்டார் மருத்துவர். "தலைமுடி பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டுமென்றால், நிச்சயம் இரும்புசத்து அவசியம். அதனோடு புரதம் மற்றும் ஆன்ட்டி-ஆக்சிடன்ட்ஸ்களும் முக்கியம். போதுமான அளவு இரும்பு சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொண்டாலே தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
வெள்ளை சர்க்கரை போன்ற ரீஃபைண்டு உணவு பொருள்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அப்படியே அவற்றை உட்கொள்ள வேண்டும் என்றாலும், மதியத்திற்கு முன்பு சாப்பிட்டு முடித்து விடவும். முக்கியமாக இரவு நேரங்களில் இதுபோன்ற உணவுகளை நிச்சயம் சாப்பிடக்கூடாது" என்று எச்சரித்தார் மருத்துவர். மேலும், ரம்யாவிற்கான எளிமையான டயட்டையும் உருவாக்கிக் கொடுத்தார்.
அதில், முட்டை, கீரை, சிறுதானிய வகை உணவுகள், பச்சைக் காய்கறிகள், முருங்கைக்காய் சூப், கீரை ஆடை உள்ளிட்ட ஏராளமான இரும்பு சத்து நிறைந்த உணவுகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதனோடு, ஸ்நாக்ஸ் வகைகளில் ABC ஜூஸ், டேட்ஸ், இலந்தைப் பழம், உளர் திராட்சை உள்ளிட்டவை இருந்தன. எந்த உணவுப் பொருளாக இருந்தாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது.
மேலும், இந்த காணொளியில் தண்டு சூப் எப்படி செய்வது என்பதையும் தன் தோழியின் உதவியோடு ரம்யா பகிர்ந்துகொண்டார். இதற்கு தேவையான பொருள்கள்,
மணத்தக்காளி கீரைத் தண்டு - 1 கொத்து மணத்தக்காளி கீரை - சிறிதளவு ஊறவைத்த சிறுபருப்பு - 1 டேபிள்ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு தக்காளி - 1 மிளகுத்தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - சிறிதளவு
சூப் செய்யத் தேவையான பொருள்கள் அனைத்தையும் குக்கரில் சேர்த்து, 3 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். இதனை வடிகட்டி எடுத்தால், சுவையான தலைமுடிக்கு வலு சேர்க்கும் சூப்பர் சூப் ரெடி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil