Advertisment

எடை குறையணும்னா இதற்கெல்லாம் 'நோ' சொல்லிடணும்: விஜே ரம்யா 5 டிப்ஸ்

VJ Ramya Fitness secrets Beauty Tips Tamil உடனடியாக குறையாவிட்டாலும், பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிடக் குறைவாகும். பக்க விளைவுகளும் எதுவும் ஏற்படாது.

author-image
WebDesk
Apr 23, 2021 11:07 IST
VJ Ramya Fitness secrets Beauty Tips Tamil

VJ Ramya Fitness secrets Beauty Tips Tamil

VJ Ramya Fitness secrets Beauty Tips Tamil : அதிகப்படியான உடல் எடையை விரைவாகக் குறைக்கப் பல எளிமையான அதே நேரத்தில் உபயோகமான டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டார் விஜே ரம்யா.

Advertisment
publive-image

"அதிகப்படியான எடையை அவசரமாகக் குறைக்கவேண்டும் என்று நினைத்து, ஏதேதோ விஷயங்களை முயற்சி செய்து அதில் பக்க விளைவுகளுடனான தோல்வியைத்தான் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். உடனடியாகக் குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் நான் சொல்லப் போகும் இந்த ஐந்து விஷயங்களை முயற்சி செய்தாலே போதும். உடனடியாக குறையாவிட்டாலும், பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிடக் குறைவாகும். பக்க விளைவுகளும் எதுவும் ஏற்படாது.

publive-image

முதலில் கலோரி பானமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அதாவது டீ, காபி, ஜூஸ் உள்ளிட்ட சர்க்கரை கலந்த பானங்கள், ஆல்கஹால் உள்ளிட்ட மது பானங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளவே கூடாது. தெரிந்தோ தெரியாமலோ இதனைக் குடிப்பதனால் அதிகப்படியான கலோரிகளை நாம் உட்கொள்கிறோம். அதற்கு பதிலாக சர்க்கரை கலக்காத காய்கறி ஜூஸ், மோர், எலுமிச்சை ஜூஸ் முக்கியமாகத் தண்ணீர் அதிகமாக உட்கொள்ளலாம்.

publive-image

அடுத்தது உட்கார்ந்துகொண்டே இருக்கக் கூடாது. எந்நேரமும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருப்பவர்கள், நிச்சயம் அவர்களை அவ்வப்போது ரிலாக்ஸ் செய்துகொள்வது முக்கியம். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் மாடிப்படிகளை அவ்வப்போது ஏறி இறங்கலாம். வெளியே எங்கேயாவது சென்றால் முடிந்த வரை நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். முக்கியமாக போன் பேசும்போதெல்லாம் நடந்துகொண்டே பேசலாம். இப்படிச் செய்வதனால் உடலில் அதிகப்படியான கலோரிகளை அழிக்க முடியும்.

அடுத்ததாக 80-20 ரூல். அதாவது 80 சதவிகிதம் சரியான உணவு பழக்கத்தைப் பின்பற்றினால், 20 சதவிகிதம் உங்களுக்கு பிடித்தவற்றை சாப்பிடலாம். அதாவது நிறையப் புரதம், கீரை மற்றும் ஃபைபர் உணவுகளை எடுத்துக்கொண்டு, வெறும் 20 சதவிகித அளவு உங்களுக்குப் பிடித்த ஐஸ் க்ரீம், பிட்ஸா உள்ளிட்ட விருப்பமான உணவுகளைச் சாப்பிடலாம். நூறு சதவிகிதம் கொழுப்பு நிறைந்த  உணவுகளை எடுத்துக்கொண்டால்தான் பிரச்சனையே. அதை செய்யவே செய்யாதீர்கள்.

publive-image

ஜங்க் உணவுகளை வாங்கவே வாங்காதீர்கள். ரொம்ப ஆசையாக இருந்தது என்றால், கொஞ்சமாக வாங்கி சாப்பிட்டுவிட்டு அப்படியே அதை மறந்து விடுங்கள். திரும்பத் திரும்ப வாங்கி தவறு செய்யாதீர்கள். பிறகு எடை குறையவே குறையாது.

publive-image

இறுதியாக மிக முக்கியமான விஷயம், சரியாகத் தூங்குவது. தூங்கும்போது தேவையில்லாத உணவுகள் மீதான ஆசைகள் வரவே வராது. அதனால், உடல் மட்டுமல்ல மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஐந்து விஷயங்களை மனதார பின்பற்றினால் நிச்சயம் அதிகப்படியான உடல் எடை விரைவாகக் குறையும்".

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vj Ramya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment