நான் ஒரு சைக்கோதான் – விஜே ரம்யா ஷேரிங்ஸ்!

VJ Ramya Fitness Secrets Tamil News இதனால், பெண்களின் உடலமைப்பு மாறிவிடுமோ, குழந்தை பெற்றெடுக்க முடியாதோ என்கிற சந்தேகமெல்லலாம் எனக்குள்ளும் எழுந்தது.

VJ Ramya Fitness Secrets Tamil News
VJ Ramya Fitness Secrets Tamil News

VJ Ramya Fitness Secrets Tamil News : என்னதான் திரையின் முன் தோன்றி மக்களை என்டெர்டெயின் செய்தாலும், அதையும் தாண்டி ஒவ்வொரு பிரபலங்களின் வாழ்க்கையிலும் ஏதாவதொரு குறிக்கோள் இருக்கதான் செய்கிறது. அந்த வரிசையில், பிரபல தொகுப்பாளினி ரம்யாவின் குறிக்கோளாக ஃபிட்னெஸ் இருக்கிறது. பிரபலமாக இருந்தாலும், தனி ஓர் பெண்ணாக பவர் லிஃப்டிங் போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றார். ஃபிட்னெஸ் தன் வாழ்வின் ஓர் அங்கமாக எப்படி மாறியது என்பதை சமீபத்தில் ஓர் நேர்காணலில் பகிர்ந்துகொண்டார் ரம்யா.

“15 வயதிலிருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறேன். நடன நிகழ்ச்சி முதல் நகைச்சுவை நிகழ்ச்சி வரை அத்தனையையும் தொகுத்து வழங்கியாச்சு. நம் வாழ்க்கை இப்படியேதான் இருக்குமா. இதற்கு மேல் என்னவெல்லாம் செய்யலாம் என்று நினைத்தபோதுதான் ஃபிட்னெஸ் என்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். இது எனக்கு மிகப் பெரிய ஆதரவு என்றே சொல்லுவேன்.

மீடியாவில் வேலை செய்வதினாலும், எந்த உடை அணிந்தாலும் நன்றாகத் தெரியவேண்டும் என்பதாலும், சாதாரணமாகவே உடற்பயிற்சி செய்வது அவசியமாக இருந்தது. அதனால், ஜும்பா, ஏரோபிக்ஸ், நீச்சல் என பல்வேறு வகையான ஃபிட்னெஸ் ட்ரெயினிங் எடுத்துக்கொண்டேன். ஆனால், அவை எதுவும் அந்த அளவிற்குப் பயனளிக்கவில்லை. அதன் பிறகுதான் என்னுடைய பாடி டைப்பிற்கு ஏற்ற ஒர்க் அவுட் பிளானை கண்டறிந்தேன்.

அதுதான் ஃபன்க்ஷனல் ஃபிட்னெஸ் (Functional Fitness). இது எனக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆச்சு. அதனைத் தொடர்ந்து பாடி பில்டிங், வெயிட் லிஃப்டிங் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செய்ய ஆரம்பித்தேன். இதனால், பெண்களின் உடலமைப்பு மாறிவிடுமோ, குழந்தை பெற்றெடுக்க முடியாதோ என்கிற சந்தேகமெல்லலாம் எனக்குள்ளும் எழுந்தது. ஆனால், என்னுடைய ட்ரெயினர் அதற்கான சரியான விளக்கத்தை அளித்து, என்னை மேலும் ஊக்கப்படுத்தினார். இப்படிதான் ஃபிட்னெஸ் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியது.

ஃபிட்னெஸ் எனக்கு ஏராளமான பாசிட்டிவிட்டியை கொடுக்கிறது. பொதுவாகவே எல்லோரும், உடலில் ஏதாவதொரு பகுதியைக் குறைக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், எனக்கு அதில் உடன்பாடில்லை. ஒன்றுகூறி குறைத்தால்தான், பலன் என்பதை நம்புகிறேன். இதற்கு நல்ல டயட் அவசியம். எந்த விஷயமா செய்தாலும், அதில் முழு ஈடுபாடு இருக்கவேண்டும். ஆசைப் பட்டால் மட்டும் போதாது, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அடம் பிடிக்கவும் தெரியவேண்டும் . அந்த வரிசையில் நான் ஒரு சைக்கோ என்று சொல்லுவேன். ஆம், ஃபிட்னெஸ் சைக்கோ”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vj ramya fitness secrets tamil news

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com