VJ Ramya Hair Fall tips for Gym goers Viral Video : பெண்களுக்கான ஃபிடென்ஸ் மற்றும் அழகுக் குறிப்புகளை தன் யூடியூப் பக்கம் வழியே தொடர்ந்து கொடுத்து வரும் விஜே ரம்யா, சமீபத்தில் ஜிம் போகும் பெண்களுக்கான தலைமுடி பராமரிப்பு குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார். தான் வழக்கமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் மருத்துவரிடம் தனக்கு இருந்த சந்தேகத்தைக் கேட்டு, அதன் பதில்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

நான் தினமும் காலையில் 2 மணிநேரமும் மாலை 1 மணிநேரமும் ஒர்க் அவுட் செய்கிறேன். அதனால், அதிகப்படியாக வியர்க்கிறது. இதனால் தினமும் தலைக்குக் குளிக்கவேண்டுமா?
“நீங்கள் ஸ்டெப் கட் செய்திருப்பதால், உங்களுக்கு நிறைய நுனி வெளிப்படையாக இருக்கும். அதனால் அதிகமாகத் தலைமுடியை வாஷ் செய்தால், உங்கள் முடி வலுவிழக்கும். அதிக நேரம் ஈரப்பதம் இருக்கும் முடி வலுவானது அல்ல என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால், தினமும் வாஷ் பண்ணவேண்டாம்.

இதற்கான ஒரு தீர்வு, தினமும் வியர்வை வருகிற அளவிற்கு ஒர்க் அவுட் செய்யவேண்டாம். இல்லையென்றால் ph பேலன்ஸ் உள்ள ஷாம்பூ பயன்படுத்தி தலை முடியை வாஷ் செய்யுங்கள். அதாவது ஒபெக் போன்ற ஷாம்பு பயன்படுத்தலாம். உங்கள் தலைமுடி மிகவும் க்ரீஸியாக இருந்தால் அதாவது ரொம்ப அழுக்காக கிரீசியா இருந்தால் க்ளியர் ஷாம்பு பயன்படுத்தலாம். அது பார்ப்பதற்குக் கண்ணாடி போல இருக்கும்.
தலைகுளிக்க நேரமில்லை ஆனால், முடி கிரீசியாக இருந்தால் என்ன செய்யலாம்?
“இதுபோன்ற சமயத்தில், குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் மென்மையான துண்டு கொண்டு முடியை மென்மையாகத் துவட்டலாம். எண்ணெய்ப்பசை போகவேண்டும் என்பதற்காக அழுத்தித் தேய்க்கக்கூடாது”

கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமா?
“கண்டிஷனரை பொதுவாகத் தலைமுடியை அலசும்போது பயன்படுத்தப்படும் மற்றும் அலசிய பிறகு பயன்படுத்தப்படும் கண்டிஷனர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முடி உதிர்வு அதிகம் இருப்பவர்கள் அலசும்போது பயன்படுத்தும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டாம். லிவான் போன்ற கண்டிஷனரை பயன்படுத்தலாம்.
அதுவும் நல்ல பிராண்டாக பார்த்து வாங்குவது அவசியம். பள்ளிப் பருவத்தில் இரட்டை பின்னல் போட்டுப் போட்டு, இந்தியப் பெண்களுக்கு நெற்றி பகுதியில் முடி இருக்காது. அதனால் அதிகப்படியாகத் தலைமுடியை இழுத்துப் பின்னக்கூடாது. எப்போதுமே லூசாகப் பின்னிப் போடலாம்.. மிகவும் சுருட்டை அல்லது ஸ்ட்ரெயிட் கூந்தலாக இருந்தால் அது பின்னல் போடும்போது உடையும். ஹேர்பேண்ட் போட்டுவிட்டு பிறகு லூசாகப் பின்னலாம். கொட்டும் முடி கூட வளர்ந்துவிடும் ஆனால், இழுத்து உதிரும் முடி வளரவே வளராது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.”
என்ன டயட் பின்பற்றலாம்?
“மில்லட்ஸ், டார்க் சிவப்பு அரிசி, கறுப்பு அரிசி, மஷ்ரும், ஓட்ஸ், முளைக்கட்டிய பயிர், பழங்கள் ஆகியவற்றை அதிகளவில் உட்கொள்ளலாம்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil