விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ரம்யா. சில படங்களிலும் நடித்துள்ளார்.
Advertisment
ரம்யா, ஒருமுறை அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
முடி பராமரிப்பு பொறுத்தவரைக்கும், நான் தினமும் வர்க் அவுட் பண்றதால நிறைய வியர்க்கும். அதனால தினமும் முடிக்கு ஷாம்பூ போட்டு கழுவுவேன். சில நேரம் வெறும் வாட்டர் வாஷ் பண்ணுவேன். வாரத்துல 3-4 நாள் ஷாம்பூ, கண்டீஷனர் யூஸ் பண்ணுவேன். அதுவும் டாக்டர் பரிந்துரைபடிதான்.
நான் தலையில எண்ணெய் வச்சு குளிக்கிறது இல்ல. நம்ம முடியில இயற்கையாவே எண்ணெய் உற்பத்தியாகும்.. அதனால நீங்க எண்ணெய் அப்ளை பண்ணா நல்லதில்லனுஎன்னோட ஸ்கின் டாக்டர் சொன்னாங்க.. அதனால நான் அது பண்றதில்ல.
எனக்கு ரொம்ப சென்சிட்டிவ் ஸ்கின். பார்லர்ல போயி ஃபேஷியல் பண்றது, ஹேர் ட்ரீட்மெண்ட்ஸ் எல்லாம் எனக்கு ஒத்துக்காது. புதுசா ஒரு கம்மல் வாங்கி போட்டாக்கூட நான் ரொம்ப கவனமா இருப்பேன். இல்லன்னா ரெட்னெஸ் வந்துரும்.
எப்போ மேக்கப் போட்டாலும், மேக்கப் ரிமூவ் பண்ணிட்டு, ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு அப்புறமா தான் நான் தூங்கேவேன். வெளியே போனா SPF அதிகமா இருக்கிற சன்ஸ்கீரின் போட்டுக்குவேன். குளிர்காலத்துல ஸ்கின் ரொம்ப டிரை ஆகும், அதனால குளிச்சு முடிச்சு உடனே மாய்ஸ்சரைசர் போடுவேன். வாரத்துல ஒருநாள் உடம்பு முழுக்க தேங்காய் எண்ணெய் தடவி குளிக்கணும், இவ்வாறு விஜே ரம்யா அந்த வீடியோவில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“