விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ரம்யா. சில படங்களிலும் நடித்துள்ளார்.
ரம்யா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் வொர்க்அவுட் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவரும்.
இப்போது ரம்யா மேக்கப் ரிமூவல் வீடியோவை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
நான் வெளியே செல்லும்போது என் முகத்துக்கு அதிகமாக எதையும் போடுவதில்லை. நான் வீட்டுக்கு வந்ததும் அதையும் முழுவதுமாக நீக்கிவிடுவேன். எந்த தடயத்தையும் தோலில் விட்டு விடுவதில்லை.
1. மேக்கப் ரிமூவல் வைப்ஸ் (எனது வழக்கமான க்ளென்சரை எடுத்துச் செல்ல முடியாததால் மட்டுமே)
2.எதிக்லோ ஃபேஸ் வாஷ்
3.பெப்டைட் தெரபி இண்டென்ஸ் ரிப்பேர் கிரீம்
4. Sesderma Reti ஏஜ் நைட் கிரீம்
5.பயோசன்ஸ் நைட் சீரம்
6.Laneige லிப் ஸ்லீப்பிங் மாஸ்க்
ரம்யா முன்னதாக அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய சரும பராமரிப்பு குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
‘எனக்கு ரொம்ப சென்சிட்டிவ் ஸ்கின். பார்லர்ல போயி ஃபேஷியல் பண்றது, ஹேர் ட்ரீட்மெண்ட்ஸ் எல்லாம் எனக்கு ஒத்துக்காது. புதுசா ஒரு கம்மல் வாங்கி போட்டாக்கூட நான் ரொம்ப கவனமா இருப்பேன். இல்லன்னா ரெட்னெஸ் வந்துரும்.
எப்போ மேக்கப் போட்டாலும், மேக்கப் ரிமூவ் பண்ணிட்டு, ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு அப்புறமாதான் நான் தூங்கேவேன். வெளியே போனா SPF அதிகமா இருக்கிற சன்ஸ்கீரின் போட்டுக்குவேன். குளிர்காலத்துல ஸ்கின் ரொம்ப டிரை ஆகும், அதனால குளிச்சு முடிச்சு உடனே மாய்ஸ்சரைசர் போடுவேன். வாரத்துல ஒருநாள் உடம்பு முழுக்க தேங்காய் எண்ணெய் தடவி குளிக்கணும்’ என்று ரம்யா அந்த வீடியோவில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“