5 நிமிட டிரிக் மூலம் உடல் எடையை எப்படி குறைப்பது என பிரபல டி.வி தொகுப்பாளினி விளக்கியுள்ளார்.
Advertisment
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் வி.ஜே ரம்யா. டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, சினிமா விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் ரம்யா தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். ரம்யா முறைப்படி பரத நாட்டியம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார்.
ரம்யா சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித் திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார், கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்ததன் மூலம் ரம்யா மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் பிறகு ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், ரம்யா பிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார். கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர். அதன் காரணமாக ரம்யாவுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளது. நியூயார்க்கில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டகிரேடிவ் நியூட்ரிஷனலில் நடிகை ரம்யா ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக சான்றிதழ் பெற்றுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரம்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரம்யா தனியாக யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் உடல் எடை சம்பந்தமான பல குறிப்புகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் StayFitWithRamya என்ற யூடியூப் பக்கத்தில் பிட்னஸ் தொடர்பான பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அனைவரும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். ரம்யாவும் முன்பு இருந்ததைவிட மிகவும் ஒல்லியாக இருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் தினமும் 5 நிமிட டிரிக் மூலம் 10 கிலோ எடை குறைப்பது எப்படி என்று ரம்யா டிப்ஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார். முதலில் காலையில் எழுந்த உடன் உடற்பயிற்சிக்கான உடைகளை கட்டாயம் அணிவது. அடுத்ததாக பால் மற்றும் சர்க்கரை இல்லாத பானத்தை பருகுவது, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு நிமிட சிறிய ஆக்டிவிட்டி செய்வது, பசிக்கும்போது மட்டும் சரியான உணவை சாப்பிடுவது, இனிப்புகளை தவிர்ப்பது ஆகிய 5 டிரிக்குகளை ஃபாலோ பண்ணினால் உங்கள் உடல் எடை கணிசமாக குறையும் என்று ரம்யா கூறியிருக்கிறார்.
மேலும், மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக உப்புகளை உட்கொள்வது, தண்ணீரை குறைவாக குடிப்பது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும். ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதேசமயம் கீரை வாழைப்பழம் போன்ற உணவுகளை தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்றும் ரம்யா டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“