டயட் டிப்ஸ், ஜும்பா, நடனம், அழகுக் குறிப்புக்கள் - ஆல் இன் ஆல் ராணி விஜே ரம்யா யூடியூப் சேனல்!
VJ Ramya Stay fit with Ramya Youtube Channel எளிய ஓர்க் அவுட், டயட் டிப்ஸ், ஜும்பா, யோகா உள்ளிட்டவற்றின் மூலம் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது எப்படி போன்ற காணொளிகள் அதிகம்.
VJ Ramya Stay fit with Ramya Youtube Channel Review Tamil News : '10 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போவும் இருக்கிறார்' என்று பார்ப்பவர்கள் அனைவரையும் கேள்வி எழுப்பத் தூண்டும் வகையில் என்றும் இளமையாக இருப்பவர் விஜே ரம்யா. அவர், தனக்கென யூடியூப் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான உபயோக காணொளிகளைப் பதிவேற்றி வருகிறார்.
Advertisment
'Stay Fit with Ramya' என்கிற பெயருக்கு ஏற்றபடி இவருடைய சேனலில் ஃபிட்னெஸ் சம்பந்தப்பட்ட விடியோக்கள்தான் அதிகம். தினசரி செய்யவேண்டிய ஒர்க் அவுட், 5 நிமிடத்தில் எளிய ஓர்க் அவுட், டயட் டிப்ஸ், ஜும்பா, யோகா உள்ளிட்டவற்றின் மூலம் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது எப்படி போன்ற காணொளிகள் அதிகம்.
4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சேனல், கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஆக்டிவாக இருக்கிறது. மேலும், நடனம் மூலமாகவும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது என ஏகப்பட்ட வீடியோக்களை அப்லோட் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, வித்தியாச ஸ்டைல்களில் புடவை கட்டுவது எப்படி, அழகுக் குறிப்புகள், சரும பாதுகாப்பு குறிப்புகள் என அழகு சம்பந்தப்பட்ட வீடியோக்களும் இவருடைய சேனலில் உண்டு.
நிபுணர்களை வைத்து டயட் டிப்ஸ், ஃபிட்னெஸ் குறிப்புகள் என உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அ முதல் ஃ வரை ரம்யாவின் சேனலில் பார்க்கலாம். வழக்கம்போல ஹோம் டூர், ஃபிரிட்ஜ் டூர், ஷு கலெக்ஷன் என லைஃப் ஸ்டைல் வீடியோக்களும் உண்டு. 3 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை வைத்திருக்கும் ரம்யாவின் சேனலில் ஏராளமான காணொளிகள் மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றிருக்கின்றன.
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது எப்படி என்கிற வீடியோ லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், கார்டியோ ஓர்க் அவுட், பெண்களுக்கான மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் பிரச்சனை என உடல் ஆரோக்கிய சம்பந்தப்பட்ட காணொளிகளும் லட்சக்கணக்கான வியூஸ்களை கடந்து பெற்றிருக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil