நமது குரல் நமது அடையாளங்களில் ஒன்றாகும். குரலை வைத்தே யார் என அடையாளம் காண முடியும். இந்த குரலையும் பாதிக்கும் வகையில் சில நேரங்களில் தொண்டை கரகரப்பு பாதிப்புகள் ஏற்படலாம். இதில் உயிரையே கொள்ளக்கூடிய நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுவது தொண்டை புற்றுநோய் ஆகும்.
- பீடி,சிகரெட், போடி இலைகள், புகையிலை போன்றவையும் தொண்டை புற்றுநோய்க்கு முக்கிய காரணம்.
- கிருமி தாக்குதலும் தொண்டை புற்றுநோய்க்கு காரணமாகும். ஊட்டச்சத்து குறைபாடும் இதற்கு காரணம்.
- காற்று மாசு, நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கும் தொண்டை புற்றுநோய் ஏற்பட காரணம் உண்டு.
தொண்டை கரகரப்பு மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்திருக்கும் சமயங்களில் கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கட்டாயமாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
சுவாசிப்பதில் சிரமம், உணவினை விளங்குவதில் சிரமம், இருமல், பேசுவதில் சிரமம், இருமலுடன் இரத்தம், பேச இயலாமை போன்ற அறிகுறிகள் மருத்துவ சிகிச்சை தேவை என்பதை குறிக்கிறது.
மேலும் குரல் மாற்றம் இருக்கும் கடுமையான கரகரப்பு மேலும் சிலருக்கு குரல் இழப்பு கூட நேரிடலாம். எனவே இதுமாதிரியான பிரச்சனையுடன் இருப்பவர்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தீவிர நிலைகளில் தொண்டை கரகரப்பு ஒரு நோயின் அறிகுறியாக வெளிப்படுகிறது. குறிப்பாக குரல்வளை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தொண்டை சார்ந்த புற்று நோய்கள் போன்றவற்றின் காரணமாகவும் உங்களது குரல் வளம் மாறி கரகரப்பு தன்மை வருகிறது.
வராம எப்படி பாத்துக்கறது மற்றும் அதன் அறிகுறிகள் | Dr Sabarinath Explains
எனவே எதுவாக இருந்தாலும் மருத்துவரை அணுகி பரிசோதித்துவிட்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண சளி தானே என்று விட்டுவிடக்கூடாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.