மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு, இதை மட்டும் பண்ணுங்க உங்களுக்கு தொப்பை, வாய்வுத் தொல்லை போயே போச்சு என்று டாக்டர் உஷா நந்தினி பரிந்துரைக்கிறார். சாப்பிட்ட பிறகு அப்படி என்ன செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொருவரும் சாப்பிட்ட பிறகு மூன்று வேளையும், 10-15 நிமிடங்கள் நடந்தால், என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் தெரியுமா? சாப்பிட்ட பிறகு, 10-15 நிமிடங்கள் நடந்தால் வாய்வுத் தொல்லை இருக்காது. செரிமானக் கோளாறு இருக்காது. சாப்பிட்ட உணவு நன்றாக செரிமானம் ஆகும். வயிற்றை சுற்றி, இடுப்பை சுற்றி கொழுப்பு இருக்காது என்று டாக்டர் உஷா நந்தினி யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு, 10-15 நிமிடங்கள் நடப்பதால், ஒரு மனத் தெளிவு இருக்கும். குடல் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் இருக்காது. இரவு நன்றாகத் தூக்கம் வரும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.
மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு, 15 நிமிடம் கழித்து 10-15 நிமிடங்கள் நடந்தால், அதற்கு பெயர் உணவுக்குபின் நடை (Post Meal Walk) என்று பெயர். இது உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு விஷயம் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.