சர்க்கரை நோய் உள்ளவர் நிச்சயம், நல்ல உடல் பயிற்சி அல்லது நல்ல நடை பயிற்சி செய்ய வேண்டும். டைப் 2 டயபடிஸ் உள்ளவர்களுக்கு, உடலில் உள்ள செல்கள் இன்சுலின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ளாது.
இந்நிலையில் டைப் 2 சர்க்கரை நோய்க்கும், நல்ல நடை பயிற்சிக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஒரு மணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் வேகத்தில் நடைபயிற்சி செய்தால் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு எல்லா கூடுதல் ஒரு கிலோமீட்டர் நடந்தால், சர்க்கரை நோய் ஏற்படும் சாத்தியம் 9 % குறையும். இந்நிலையில் ஜப்பான், லண்டன், அமெரிக்காவில் உள்ள 5 லட்சம் மக்களிடம் நடைபெற்ற ஆய்வில், ஒரு மணி நேரத்தில் 3 முதல் 4 கிலோமீட்டர் வேகத்தில், நடந்தால், 15 % டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
ஒரு மணி நேரத்தில் 5 கிலோமீட்டர் வேகத்தில் நடந்தால், 35 % டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது மட்டும் இல்லாமல் தினமும் நாம் இதை அன்றாம் செய்வதால்தான் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“