Walking Blood circulation Diabetes Blood pressure Weight loss
உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் பல நோய்கள் நம்மை அண்டாது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதில் நடைப்பயிற்சி முக்கியப் பங்காற்றுகிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ள முடியும், என்கிறார் டாக்டர் ராஜலெட்சுமி.
Advertisment
எடை குறைப்பு மற்றும் நடைப்பயிற்சி:
நடைப்பயிற்சி எடை குறைப்புக்கு உதவும் என்பது உண்மைதான். ஆனால், இது படிப்படியாக நிகழும் ஒரு செயல். "ஒரு வாரம் நடந்துவிட்டேன், எல்லாமே சாப்பிடுகிறேன், ஆனாலும் எடை குறையவில்லை" என்று நினைப்பது தவறான புரிதல். ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற முக்கிய உடல் செயல்பாடுகள் சீராகும் போதுதான், படிப்படியாக எடை குறைப்பும் சாத்தியமாகும்.
Advertisment
Advertisements
நடைப்பயிற்சியைத் தொடங்குவது எப்படி?
இதுவரை நடைப்பயிற்சி செய்யாதவர்கள், புதிதாகத் தொடங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. எடுத்தவுடனேயே நீண்ட நேரம் வேகமாக நடக்கக் கூடாது. முதல் சில நாட்களுக்கு, தினமும் 10 நிமிடங்கள் மட்டும் நடப்பது நல்லது. பின்னர், படிப்படியாக நேரத்தை அதிகரிக்கலாம்.
நடைப்பயிற்சியை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்