scorecardresearch

மாரடைப்பு பயம் இருக்கா? தினமும் 6000- 9000 அடி நடங்க..!

மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் டாக்டர் அமண்டா பலுச், ஒவ்வொரு 1000 அடி நடைப்பயிற்சியில், சிவிடி அபாயம் குறைகிறது என்று கூறியுள்ளார்.

மாரடைப்பு பயம் இருக்கா? தினமும் 6000- 9000 அடி நடங்க..!
உடல் செயல்பாடு இதய ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும் என்று டாக்டர் பூஷன் பாரி, ஆலோசகர் இருதயநோய் நிபுணர் கூறுகிறார்.

அனுராதா மஸ்கரன்ஹாஸ்

உடற்பயிற்சி தொடர்பான செயலிகளில் 10,000 அடி நடைபயணம் மேற்கொள்வதை பயிற்சியாக காண்பிப்பதை நாம் கண்டுள்ளோம். அதை போல, மாரடைப்பைத் தடுக்க தினமும் எத்தனை அடி நடக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெறியுமா?

ஒரு புதிய ஆய்வு, பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள், ஒரு நாளைக்கு 6,000 முதல் 9,000 படிகள் நடப்பதன் மூலம் இருதய நோய் (CVD) அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம் என்று காட்டுகிறது.

மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் டாக்டர் அமண்டா பலுச், ஒவ்வொரு 1000 அடி நடைப்பயிற்சியில், சிவிடி அபாயம் குறைகிறது என்று கூறியுள்ளார்.

தினமும் 2,000 அடி நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுடன் ஒப்பிடும்போது, ​​​​ஒரு நாளைக்கு 6,000 முதல் 9,000 படிகள் நடப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்களின் ஆபத்து 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“இந்த ஆய்வு பல பெரிய அளவிலான ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளை எதிரொலிக்கிறது, இது 7,000-10,000 அடி தினசரி நடைப்பயிற்சி மேற்கொண்டால் இருதய ஆரோக்கியமாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள்.

இவற்றை அடைவது மிகவும் கடினம் அல்ல. படிக்கட்டுகளை அதிகமாகப் பயன்படுத்துதல், காரை சிறிது தூரத்தில் நிறுத்தி நடந்து செல்வது, சிறு சிறு வேலைகளைச் செய்து உடலுக்கு பயிற்சி கொடுப்பது போன்ற செயல்பாடுகளை அதிகப்படுத்தினாலே, உங்கள் இலக்கை சிரமமின்றி அடையலாம்.

முதல் நாளிலிருந்து நீங்கள் அதை இலக்காக வைத்துக்கொள்ள தேவையில்லை, ஆனால் படிப்படியாக உருவாக்கலாம். ஒரு வாரத்திற்கு தினமும் 500 அடி நடைப்பயிற்சி அதிகரிக்க முயற்சி செய்யுங்கள், பின்னர் ஒவ்வொரு வாரமும் உங்கள் இலக்கை அடையும் வரை மேலும் 500 அடிகள் அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்” என்கிறார் மும்பை சர்.எச்.என்.ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் மறுவாழ்வு மற்றும் விளையாட்டு மருத்துவத்தின் இயக்குனர் டாக்டர் ஆஷிஷ்.

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் கெளரவப் பேராசிரியரான டாக்டர் கே ஸ்ரீநாத் ரெட்டி, இதயம் மற்றும் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நடைப்பயிற்சி நன்மை பயக்கும் என்ற செய்தியை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்துகிறார்.

இம்முயற்சி வயதானவர்களுக்கும் நன்றாக வேலை செய்கிறது என்பதற்கான சான்றுகளை இருக்கிறது. “ஒரு நபர் ஒரு நாளைக்கு 3000 அடிகளில் இருந்து 9000 அடிகளுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, உடல்நிலை முன்னேருவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது.

தினமும் 6000 அடிக்கு மேல் நடைப்பயிற்சி மேற்கொண்டால் தசைகளில் இன்சுலின் எதிர்ப்பு குறையும், இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு நன்மை பயக்கும். ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை ஆகியவையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

புதுடெல்லி, எய்ம்ஸ் இதயவியல் பேராசிரியர் டாக்டர் அம்புஜ் ராய் கூறியதாவது, “இதயம் மற்றும் மூளைத் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

எந்தவொரு உடல் பயிற்சியும் நன்மை பயக்கும், மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 15,000 அடிகள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது.

உடற்பயிற்சியின் மூலம் கிடைக்கும் பலன் அளவு, BP குறைப்பு மருந்துகள் மற்றும் ஸ்டேடின்கள் போன்ற நிறுவப்பட்ட சிகிச்சைகளுக்குச் சமம், மேலும் இவ்விரண்டும் பரிந்துரைக்கப்படும் போது கூடுதலான நன்மை தான்”, என்று அவர் கூறுகிறார்.

“வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கும், நடக்கவே நேரம் கிடைக்காதவர்களுக்கும் இந்த ஆய்வு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 1,000 முதல் 2,000 அடிகள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது என்று சிறிய அளவில் முயற்சி செய்யும்போது பெரிய அளவில் உதவும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் டிஸ்லிபிடெமியா போன்ற ஆபத்தில் உள்ள நபர்களில் விளைவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன, “என்று அவர் கூறுகிறார்.

“நடத்தல் மற்றும் ஓடுதல் போன்ற உடல் செயல்பாடுகள் உடல்நலக் கேடுகளைத் தடுப்பதில் மிகவும் உதவியாக இருக்கும் என்று எண்ணற்ற ஆய்வுகள் உள்ளன. இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம், எந்த உடல் செயல்பாடும் இதயத் துடிப்பை அதிகரிக்கும்.

செயல்பாட்டின் போது இதய துடிப்பு 100 க்கு மேல் இருந்தால், இதய வெளியீடு மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பை உருவாக்கும் முகவர்களை உட்கொள்வதற்கு காரணமாகும்,” என்கிறார் இதய நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சஞ்சீவ் ஜாதவ்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Walking can help people to get rid of heart attacks

Best of Express