Advertisment

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஹெல்த்தியான ‘லோ கலோரி’ ஸ்நாக்ஸ்!

அதிக கலோரி உள்ள உணவுகள் உடல் எடையை மட்டும் அதிகரிக்காது, இதய சம்பந்தமான பிரச்னைகளையும் அது ஏற்படுத்தும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Low Calorie Foods

Low Calorie Foods

ஸ்நாக்ஸைப் பொறுத்தவரை, க்ரீஸி தன்மையில் இருக்கும் உணவுகளை தான் நம்மில் பலரும் விரும்பி சாப்பிடுவோம்.

Advertisment

ஆனால் அவற்றில் அதிக அளவு கலோரி இருப்பதை நாம் உணர மறுக்கிறோம். அதிக கலோரி உள்ள உணவுகள் உடல் எடையை மட்டும் அதிகரிக்காது, இதய சம்பந்தமான பிரச்னைகளையும் அது ஏற்படுத்தும்.

சர்க்கரை உணவுகள், பொரித்த உணவுகளின் கலோரிகள், எம்ப்டி கலோரிகள் உடலில் ஃபேட்டாக சேமித்து வைக்கப்படும். அதிக கலோரிகள் இல்லாமல் ஹெல்த்தியான ஸ்நாக்ஸை இதற்கு மாற்றாக வைத்துக் கொள்ளலாம்.

அவற்றை இங்கே பார்ப்போம்.

முட்டை மசாலா பொறியல்

Egg Bhurji Egg Bhurji

அதிகளவு புரோட்டீன் சத்தைக் கொண்டது முட்டை. இதில் பரோட்டா, குழம்பு, ஆம்லெட், டோஸ்ட் என விதவிதமான உணவுகளை செய்ய முடியும். அதோடு முட்டை மசாலா பொறியல் குறைந்த கலோரியில், சாப்பிட்ட மனநிறைவைக் கொடுக்கும்.

இதற்கு இந்திய சமையலில் முன்னணி இடம் வகிக்கும், மசாலாக்களும், குறைந்த அளவு எண்ணெய்யும் போதுமானது.

உங்களுக்குப் பிடித்த காய்கறிகளையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். பிறகென்ன? சூடான ஒரு கப் டீ-யுடன் முட்டை மசாலா பொறியல் அட்டகாசமாக இருக்கும்.

ஓட்ஸ் இட்லி/ரவா இட்லி

Rava Idli Rava Idli

இட்லி மாவு நொதித்தல் முறையில் புளிக்க வைக்கப்படுவதால், ஜீரணத்தை எளிதாக்கும். அதோடு மாவில் மினரல்ஸும் அதிகமாகும். அதனால் இட்லியை ஃப்ரை பண்ணாமல், வேக வைத்து அப்படியே சாப்பிடவும்.

இட்லி மாவில் கொஞ்சம் ரவை, பொடிபொடியாக நறுக்கிய காய்கறிகள் உள்ளிட்டவைகளை சேர்த்தால், டேஸ்டாகவும், ஹெல்த்தியாகவும் இருக்கும். ஓட்ஸ் இட்லியும் முயற்சி செய்து பாருங்கள்.

சிக்கன் டிக்கா

chicken tikka chicken tikka

நார்த் இந்தியன் ஸ்பெஷல் உணவான இதில் சிக்கன் ரோஸ்ட் செய்யப்பட்டிருக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடலாம்.

கலோரி அளவைக் குறைக்க, சிக்கன் கெபாபிற்குப் பதில் சிக்கன் டிக்காவை தாராளமாக சாப்பிடுங்கள்.

ஸோ, அடுத்த முறை சூடான டீ-க்கு ரெகுலர் சமோசாவையும், பக்கோடாவையும் தவிர்த்து விட்டு, மேற்கூறிய ஐட்டங்களை ட்ரை செய்துப் பாருங்கள்!

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment