அழகான முகம் வேண்டும் என்று விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். அழகிற்கும், அறிவுக்கும் சம்பந்தம் உண்டோ என்றால் கண்டிப்பாக கிடையாது. ஆனால், அழகிற்கும் தன்னபிக்கையும் கட்டாயமாக சம்மந்தம் உண்டு. ஒரு அழகான பெண் தன்னை சமூகத்தில் மிகவும் தைரியமாகவே காட்டுக் கொள்கிறாள்.
அதற்காக அவள், அழகை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தமில்லை. அழகான முகத்தோற்றம் அவளுக்கு கூடுதல் ஒரு பலத்தை தருகிறது. அழகு என்பது வெறும் நிறத்தையும், வெள்ளை தோலையும் குறிப்பிடுவதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்கள் டார் நிற ஸ்கீன் ரோனையே பெரும்பாலும் விரும்புகின்றன.
முகமானது, பருக்கள், கருவளையம், வெள்ளைத் திட்டுக்கள் இல்லமால் இருந்தாலே மிகவும் அழகாக தெரியும். கூடுதலாக இதை செய்தால் வழக்கத்தை விட பளிச்சிடும்.
> பாலில் ரோஜா இதழ்களை சிறிது நேரம் ஊற வைத்து அதை முகத்தில் தடவி கழுதி வந்தால் புதுப்பொலிவு ஏற்படும்.
>தேங்காய்ப் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
> வெயிலினால் ஏற்பட்ட கருமை மறைய ஆரஞ்சுப் பழத் தோலை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, பாலுடன் கலந்து தோலில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வரவேண்டும்.
>வேப்பிலைக் கொழுந்தைப் பறித்து அரைத்து முல்தானி மிட்டி பவுடரை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் எண்ணெய்ப்பசை குறைந்து பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
> புதினா, வேப்பிலை, குப்பைமேனி மற்றும் சிறிது மருதாணி இலைகளை காயவைத்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு எடுத்து பாலில் கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊற வைத்துக் குளித்தால் முகத்தில் வியர்க்குரு வராமலும் வெயிலில் கறுத்துப் போகமலும் இருக்கும்.
>சந்தனம், பால், கடலை மாவு, மஞ்சள் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் மாறும்.
>தண்ணீரை விட முகத்திற்கு அழகு தரக் கூடிய பொருள எதுவுமில்லை. முடிந்த வரை முகத்தை அடிக்கடி வெறும் தண்ணீரில் கழுவுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.