”நான் ஒரு பெண், தனியாக உலகம் சுற்றுவேன்”: இவரின் பயண டிப்ஸ்கள் என்னென்ன?

ஆனால், நாம் பயணத்தின்போது கூடுதல் ஜாக்கிரதை உணர்வுடன் இல்லையென்றால், முன்பின் தெரியாத இடத்தில் நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

பயணங்கள் எப்போதும் நமக்கு மகிழவையே தரும் விஷயம். ஆனால், நாம் பயணத்தின்போது கூடுதல் ஜாக்கிரதை உணர்வுடன் இல்லையென்றால், முன்பின் தெரியாத இடத்தில் நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும். அதுவும் பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்வதற்கு முன் இன்னும் கூடுதலாகவே பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

சியரா ஜான்சன், என்ற பயணத்தின் மீது பெரும் காதல் கொண்ட பெண் ஒருவர், பயணங்களின் போது பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிந்து வருகிறார்.

அதுகுறித்த பதிவில், “நான் ஒரு பெண். இந்த உலகத்தை தனியாக சுற்றி வருகிறேன். மெக்ஸிகோவில் இருந்து மொரோக்கோ அங்கிருந்து க்யூபா, அதன்பின் போஸ்னியா என பல நாடுகளுக்கும் பயணம் செல்வேன். நான் எப்படி பாதுகாப்பாக பயணம் மேற்கொள்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்”, என அவர் தெரிவித்துள்ளார்.

தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு அவர் கூறும் பாதுகாப்பு ஆலோசனைகள் சில:

– உங்களை யாராவது பின்தொடர்கிறார்களா? உங்களுக்கு மிக அருகில் யாரேனும் வருகிறார்களா என்பதை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

– பயணம் செல்லும் இடங்களின் கலாச்சாரம், ஆடை அணியும் முறை, வானிலை, சடங்குகள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

– சக பெண்களை நம்புங்கள். உங்களுக்கு வழிகள் ஏதேனும் தெரிய வேண்டுமென்றால், பெண்களிடம் கேளுங்கள். ஆனால், எல்லா பெண்களையும் நம்ப வேண்டும் என்பது கிடையாது.

– உடல்நிலை சரியில்லையென்றால், உங்களை கவனித்துக் கொள்வதிலிருந்து பின்வாங்காதீர்கள்.

– பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை பல்வேறு பைகளில் பிரித்து வைக்க வேண்டும். அப்போதுதான், தவறி ஏதேனும் ஒரு பை திருடுபோனால் மற்றவற்றை வைத்துக்கொண்டு முன்னேற முடியும்.

×Close
×Close