fluffy idlis : உலகில் சிறந்த உணவுகளில் ஒன்றாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது தான் நம்மூர் இட்லி. கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும். தயாரிப்பதும் மிகவும் எளிது. பலரும் இட்லியின் தாயகம் தென்னிந்தியா என்கிறார்கள். சிலர் அது இந்தோனேசிய உணவுகளில் ஒன்றாக இருந்தது என்கிறார்கள். எது எப்படியோ ஆனால் பலருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்றாகவே இருக்கிறது இட்லி.
Advertisment
ஆனால் பல நேரங்களில் நம்முடைய வீட்டில் வைக்கப்படும் இட்லிகள் அவ்வளவு சாஃப்ட்டாக இல்லை என்ற வருத்தம் எல்லாருக்கும் தான் இருக்கும். ரொம்ப மெதுவான, சாஃப்ட்டான, பூப்போன்ற இட்லி வேண்டும் என்றால் அதில் சில முக்கியமான விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி தான் இதற்கு உகந்தது. மிகவும் நீளமான அரிசி வகைகளை பயன்படுத்த வேண்டாம்.
2;1 என்ற விகிதத்தில் தான் அரசியும் உளுந்தும் இருக்க வேண்டும். பாரம்பரியமாக கறுப்பு உளுந்து தான் பயன்படுத்துவார்கள். ஆனால் அதன் தோளை நீக்குவதற்கு மிகவும் நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் வெள்ளை உளுந்து வாங்கப்படுகிறது.
மெதுவான இட்லிக்கு வெந்தயம் தான் ரகசியம். ஊறவைத்த வெந்தயத்தை அரிசியுடன் சேர்த்து அரைத்தால் சூப்பர் இட்லி ரெடி. ஆனால் அளவுக்கு அதிகமாக போனால் கசந்துவிடும்.
இந்துப்பு பயன்படுத்தினால் அதன் ருசியே தனி தான். இன்னும் மென்மையான இட்லிக்கு பல இடங்களில் அவுல் சேர்த்து மாவை அரைப்பது உண்டு. தண்ணீர் பதமும் முக்கியம். மாவு புளித்தவுடன் கொஞ்சம் இலகும். எனவே தண்ணீர் அளவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் வெட் கிரைண்டர் இல்லை என்றால் மிக்ஸியில் மாவினை அரைக்கலாம். ஆனால் குளிர்ந்த நீரை அதில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இட்லி தட்டில் எண்ணெய் தேர்த்து பிறகு மாவினை ஊற்றுங்கள். நன்றாக வெந்த பின்பு, ஷார்ப்பான கரண்டி கொண்டு இட்லியை எடுங்கள். நீங்கள் விரும்பும் சூப்பர் இட்லி ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil