/indian-express-tamil/media/media_files/2025/05/17/pYBp4dJsh6JR3yLpjQVn.jpg)
எப்போதும் இளமையாக இருக்கணுமா? சர்க்கரைக்குப் பதில் இது; இப்படி சாப்பிடுங்க: டாக்டர் டெய்சி
உங்களை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க, சில உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சருமத்திற்கு முழுமையான ஊட்டச்சத்தை அளித்து இளமையாகவும் அழகாகவும் இருப்பீர்கள். நீங்களும் அழகான மற்றும் இளமையான சருமத்தை பெற விரும்பினால், கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க மிகவும் முக்கியமான உணவுகள் எவை என்பதை பற்றி பார்க்கலாம்.
பழங்கள்: அனைத்து வகையான பழங்களும், காய்கறிகளிலும் முதுமையைத் தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இவற்றில் வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், பாலிபினால்கள் உள்ளன. அவற்றின் நுகர்வு சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கீரைகள்: கீரை வகைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, ஃபோலேட் ஆகியவை நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் செல் பழுது, கொலாஜன் உற்பத்தி மற்றும் நீரேற்றப்பட்ட சருமத்தை பராமரிப்பதற்கு முக்கியமாகும், இது நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவும். கீரை பொறியல் அல்லது கீரை கடையல் என உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
கவுணி அரிசி: ராஜ உணவு கவுணி அரிசி. நரம்புகளைப் பலப்படுத்தக்கூடியது உடம்பில் உள்ள கழிவுகளை அகற்றக் கூடியது. ஆயுளை அதிகரிக்க கூடிய உணவு. காலை, மதியம், இரவு என 3 வேளைகளில் எந்த வேளையிலும் சாப்பிடலாம். டயாபெட்டிக் நோயாளிகள் கூட சாப்பிடலாம்.
தேங்காய்: உடம்பில் இருக்கக்கூடிய குடல் புண்கள், வயிறு புண்கள், கழிவுகள் சுத்தப்படுத்துதல், கண் பார்வைக்கு நல்லது. பச்சை தேங்காய் சாப்பிடுவது நல்லது.
மாதுளை: வயது எதிர்ப்புக்கான உணவுப் பட்டியலில் முக்கிய பங்கு வகிப்பது மாதுளை. மாதுளையில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்பட்டு சூரிய ஒளியில் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்த்துப் போராட வைக்கிறது. உடலின் திறனை அதிகரிக்க உதவுகிறது. சருமத்தை மென்மையாகவும், அழகாகவும் வைத்திருக்க கொலாஜன் உதவுகிறது.
தேன்: தேன் தொடர்ந்து சாப்பிடும்போது மூளை வளர்ச்சி, கண் பார்வைக்கு நல்லது. அனைத்து வகையான பூக்களில் இருந்து தேனீ என்ற தேவதூதர்கள் நமக்காக சிறுக சிறுக சேகரித்து நமது கைகளில் கொடுத்திருக்கக்கூடிய தெய்வீக உணவுதான் தேன். தேனை எப்படி சாப்பிடலாம்? பழ ஜூஸ் குடிக்கும்போது 3 ஸ்பூன் தேனை அதில கலந்து குடிக்கலாம். காலையில ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணில தேன் கலந்து சாப்பிடலாம். பாலில் தேன் கலந்து சாப்பிடலாம். எங்கெல்லாம் சர்க்கரை பயன்படுத்துகிறோமோ, அதில் எல்லாம் தேன் கலந்து சாப்பிடலாம் என்கிறார் மருத்துவர் டெய்சி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.