அசாம் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான நடன போட்டியில், புதுச்சேரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
கடந்த வாரம், தேசிய அளவிலான கலாசார நடன போட்டி அசாம் மாநிலத்தில் நடைபெற்றது. இதில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட 23 மாநிலங்களைச் சேர்ந்த 440 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில், புதுச்சேரி அரசு அன்னை சிவகாமி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் மாணவர்கள் 20 பேரும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய நடனங்களான தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், தாளம், பறை ஆகியவற்றை இந்த மாணவர்கள் ஆடினர்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்று திரும்பிய மாணவர்களுக்கு அரசு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பேருந்து நிலையத்தில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. குறிப்பாக, ஆரத்தி எடுத்து, ஆட்டம், பாட்டத்துடன் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.