நாம் தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி குடித்தால் நமது கல்லீரல், சருமம், குடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் நாம் குடிக்கும் தண்ணீர் பாட்டிலை நாம் அடிக்கடி கழுவ வேண்டும். நான் கழுவாமல் பயன்படுத்தினால் அதில் நுண்ணுயிரிகள் வளரும் வாய்ப்புள்ளது.
மேலும் பிளாடிக் பாட்டிலில் பேக்டீரியா, பூஞ்சை வளரும் வாய்ப்புள்ளது உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 2017ம் ஆண்டு நடத்திய ஆய்வில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டிலில் 75,000 வகை பேக்டீரியா இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ், ஸ்டாச்சிபோட்ரிஸ் சார்டரம் உள்ளது. இது நமது வாட்டர் பாட்டிலில் காணப்படும் பூஞ்சை
இந்நிலையில் தினமும் நாம் குடிக்கும் பாட்டிலை நாம் கழுவ வேண்டும். சில வாரங்கள் வரை கழுவாமல் நாம் தண்ணீர் குடித்தால், நமக்கு குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப் பிரச்சனை ஏற்படலாம்.
தினமும் கழுவ முடியவில்லை என்றால், வாரத்திற்கு 2 முதல் 3 முறை கழுவ வேண்டும். நாம் வாய் வைத்து குடிக்கும் பாட்டிலின் வாய் பகுதி கழுத்து பகுதி மற்றும் உள்புறத்தில் நாம் நன்றாக கழுவ வேண்டும்.
இந்நிலையில் பீஸ்டிக், அலுமினிய வாட்டர் பாட்டிலை தவிப்பது நல்லது. இதற்கு பதில ஸ்டீல், கண்ணாடி பாடில்களை நாம் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பாட்டிலில் அதிக பாக்டீரியா, பூஞ்சை வளரும். மேலும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் நமது உடலில் கலக்கலாம்.
நாம் பாட்டிலை சுத்தம் செய்யும்போது சோப்பு தண்ணீர் பிரஷ்யை பயன்படுத்த வேண்டும். சூடான தண்ணீரில் பேக்கிங் சோடா, வினிகர் சேர்த்து கலந்து இதை வைத்து நாம் கழுவலாம். பாதி தண்ணீர், வினிகர் சேர்த்து கலந்து அதில் பாட்டிலை அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு கழுவலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“