பழைய டூத் பிரஷ் போதும்… கதவு, ஜன்னல் முதல் கொசுவலை வரை கிளீன் பண்ண இப்படி யூஸ் பண்ணுங்க!
பல் துலக்கிய பிறகு தூக்கி எறியும் பழைய டூத் பிரஷ்கள் குப்பையில் எறியாமல், உங்கள் வீட்டில் தினசரி சுத்தம் செய்யும் வேலைகளை எளிதாக்கவும், சிரமமான மூலைமுடுக்குகளைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.
பல் துலக்கிய பிறகு தூக்கி எறியும் பழைய டூத் பிரஷ்கள் குப்பையில் எறியாமல், உங்கள் வீட்டில் தினசரி சுத்தம் செய்யும் வேலைகளை எளிதாக்கவும், சிரமமான மூலைமுடுக்குகளைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.
பழைய டூத் பிரஷ் போதும்… கதவு, ஜன்னல் முதல் கொசுவலை வரை கிளீன் பண்ண இப்படி யூஸ் பண்ணுங்க!
பல் துலக்கிய பிறகு தூக்கி எறியும் பழைய டூத் பிரஷ்கள் உங்கள் வீட்டில் தினசரி சுத்தம் செய்யும் வேலைகளை எளிதாக்கவும், சிரமமான மூலை முடுக்குகளைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். நமது வாழ்க்கைக்குத் தேவையான பல சிறுசிறு விஷயங்களை, எளிதான முறையில், 'வேஸ்டான' டூத்பிரஷ் கொண்டு எப்படிச் செய்யலாம் என்று நித்யாஸ் லைஃப் ஹேக்ஸ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Advertisment
கதவு இடுக்குகள் முதல் கிரில் கேட் வரை: தூசுகளை விரட்ட டிப்ஸ்
நாம் துணியால் துடைக்கும்போது கதவின் இடுக்குகளில் உள்ள தூசுகளை முழுமையாக அகற்ற முடியாது. ஆனால், பழைய டூத் பிரஷை எடுத்து, இந்த இடுக்குகளில் உள்ள தூசுகளை லேசாகத் தட்டிவிட்டால், எளிதாக அவை நீங்கிவிடும். குறிப்பாக, வேலைப்பாடுகளுடன் கூடிய பிரதான கதவுகள், பூ டிசைன்கள் அல்லது பிள்ளையார் டிசைன்கள் உள்ள இடங்களில் சேரும் தூசுகளை அகற்ற இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டின் கிரில் கேட் கம்பிகளுக்கு இடையில் சேரும் தூசுகளை சுத்தம் செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். கைகளாலோ துணியாலோ அடைய முடியாத இடங்களில், பழைய டூத் பிரஷைக் கொண்டு எளிதாகச் சுத்தம் செய்யலாம். இது தூசுகளை சிரமமின்றி அகற்ற உதவும்.
Advertisment
Advertisements
ஜன்னல்களில் உள்ள கொசு வலைகளில் தூசி சேர்வது தவிர்க்க முடியாதது. அடிக்கடி இவற்றை அகற்றிச் சுத்தம் செய்வது கடினம். ஆனால், வீடு பெருக்கும்போது, டூத் பிரஷால் கொசு வலைகளில் உள்ள தூசுகளை லேசாகத் தட்டிவிட்டாலே அவை வந்துவிடும். தினமும் செய்ய வேண்டிய அவசியமில்லை; 3 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் போதும்.
சமையலறையின் சவால்களுக்குத் தீர்வு!
கை நுழையாத கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களை சுத்தம் செய்யக் கஷ்டப்படுகிறீர்களா? பழைய டூத் பிரஷை லேசாகச் சூடாக்கி வளைத்துக் கொள்ளுங்கள். இந்த வளைந்த பிரஷைப் பயன்படுத்தி, பாட்டில்களின் அடி பாகங்கள், எண்ணெய் பிசுக்குள்ள பாட்டில்கள், ஏன் மிக்ஸி ஜார்களின் இடுக்குகள் போன்ற சுத்தம் செய்யக் கடினமான பகுதிகளையும் எளிதாக சுத்தம் செய்யலாம்.
அடுப்புக்குப் பின்னால் உள்ள டைல்ஸ்களில் சேரும் பிசுபிசுப்பான எண்ணெய் கறைகளைப் போக்க, டூத் பிரஷின் முனையில் ஒரு ஸ்டீல் நாரை ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக்கொள்ளுங்கள். பிரஷைப் பயன்படுத்தி டைல்ஸ் இடுக்குகளில் உள்ள எண்ணெய் பிசுக்கை எளிதாகத் தேய்த்து நீக்கலாம். இது கைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
சமையலறையில் உள்ள ஸ்டீல் ராக்குகள், தோசைக்கல் வைக்கும் ராக்குகளில் சேரும் எண்ணெய் பிசுக்கை அகற்ற, 2 டூத் பிரஷ்களை ஒன்றாகச் சேர்த்து ரப்பர் பேண்ட் அல்லது நூல் கொண்டு இறுக்கமாகக் கட்டுங்கள். இந்த பிரஷ்களுக்கு இடையில் சோப் பேஸ்ட் அல்லது லிக்விடை தடவி, ராக்கின் கம்பிகளுக்கு இடையில் அழுத்தித் தேய்க்கும்போது, எண்ணெய் பிசுக்கு எளிதில் நீங்கிவிடும். ஸ்கிரப்பரைக் காட்டிலும் இது மிகவும் எளிமையானது. உங்கள் வீட்டில் உள்ள சைக்கிளின் கம்பிகளில் உள்ள பிசுக்கையும் இதே முறையில் சுத்தம் செய்யலாம்.