கணவனை ‘டா’ என்று செல்லமாக அழைத்த சோனம் கபூர்... கண்டித்த தாய்!!!

திருமணம் ஆன நடிகை சோனம்  கபூர், தனது ஆசை கணவனை செல்லமாக  ’டா’ என்று அழைப்பதை அவரின், தாய் கண்டிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில்  வெளியான அமராவதி படத்தில்  நடிகர் தனுஷூக்கு ஜோடியாக  நடித்தவர் தான் சோனம் கபூர். கபூர் குடும்பத்தில் இருந்த வந்த இவர், பாலிவுட்டில் பல முன்னணி நடிகர், நடிகைகளுடன் நடித்துள்ளார்.  விமான பணிப்பெண் நீரஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கூட நீரஜாவாக சோனம் கபூர் தான் நடித்திருந்தார்.

இந்நிலையில், சோனம் கடந்த 4 வருடங்களாக தொழிலதிபர்  ஆனந்த் அஹுஜாவை காதலித்து வந்தார். இருவீட்டாரின் சம்மதத்துடன்  இருவரும்  திருமணம் செய்துக் கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், தான் நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். அதனால் கபூர் குடும்பத்தில் நடைப்பெற இருந்த திருமணம் தள்ளிப்போகியது.

பின்பு, மே 8 ஆம் தேதி சோனம் கபூருக்கும் , ஆன்ந்திற்கும்  மும்பையில் திருமணம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  இரண்டு நாட்கள், சங்கித், பார்ட்டி என நடந்த இவர்களின்  திருமண சடங்குகளில் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.   நேற்று  (8.5.18)மதியம் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள பங்களாவில் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகும், சில சடங்குகளும் தொடர்ந்து நடைப்பெற்றன. அதில் மாலை மாற்றிக் கொள்ளும் ஒருவிதமான சடங்கு நடைப்பெற்றது. அப்போது சோனம், தனது கணவருக்கு மாலை போடுகிறார். அந்த சமயம் அவரது கையில் இருந்த  நீண்ட வளையல் ஆன்ந்தின் சட்டையில் மாட்டிக் கொள்கிறது.

உடனே சோனம், வழக்கமான  தோனியில்  கணவரை  ”செல்லமாக பாபு சாரி” என்கிறார். இந்தியில் பாபு என்பது  டார்லிங், டா, பேபி என்று அர்த்தம். ஆனால் உடனே சோனன் கபூரின்  தாய் பாபு சொல்லாதே வாங்க, போங்க என்று கூப்பிடு என்று கண்டித்து சொல்கிறார்.  உடனே சோனம் தனது தவறை திருத்திக் கொண்டு கணவரிடம் சாரி கேட்கிறார்.

இந்த வீடியோ  தற்போது வெளியாகியுள்ளது.  32 வயதாகும் சோனம் கபூர் கணவரை எப்படி அழைக்க வேண்டும் என்று கூட தாய் சொல்வதை கேட்கும் கியூட் வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது

×Close
×Close