Watch video Samantha Ruth Prabhu paint artist Tamil News : நிலையான வாழ்க்கை நடைமுறைகள் முதல் நட்சத்திர ஃபேஷன் தேர்வுகள் வரை அனைத்திலும் சமந்தா ஓர் முன்னுதாரணமாக இருக்கிறார். அந்த வரிசையில் சமீபத்தில் தன்னுள் இருக்கும் பெயின்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அது ஒரு பெரிய பிரச்சாரத்திற்கானது என்கிறார் சமந்தா.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சமந்தா ஒரு ஓவியக் கலைஞருடன் இணைந்து இந்த ஓவியத்தைத் தீட்டியிருக்கிறார்.
“அந்த நாட்களில் ஒன்று! உங்களுக்குள் ஒரு குரல் கேட்டால் ‘உங்களால் ஓவியம் வரைய முடியாது’ என்பார்கள். ஆனால், எல்லா வகையிலும் வண்ணம் தீட்டினால், அந்த குரல் அமைதியாகிவிடும்” என்று சமந்தா அந்தப் புகைப்படத்தோடு கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
ஹோப் காஸ்மோஸ் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம், கலைஞர் மனோகர் சிலுவேருவின் படைப்புகளையும் கொண்டுள்ளது மற்றும் ஸ்ரீஷ்டி ஆர்ட் கேலரியின் கண்காட்சியின் ஒரு பகுதியாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
சமந்தாவைப் பொறுத்தவரை, இந்த திட்டம் சமூகத்துடன் ஈடுபடுவதையும், மக்களை குணப்படுத்துவதற்கும் ஒன்றிணைப்பதற்கும் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்கும் இந்தக் கலையை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
“இது ஒரு வகையான கண்காட்சி. மேலும், சமந்தா ரூத் பிரபு, ஷில்பா ரெட்டி மற்றும் பலரையும் ஓவியக் கலைஞருடன் இணைந்து பெரிய பிரச்சாரத்தை முன்வைக்க அழைத்துள்ளோம். இந்தக் கலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், தேவையில் இருக்கும் படைப்பாற்றல் சமூகத்தை ஆதரிப்பதற்கும், குறிப்பாக இதுபோன்ற நேரத்தில் அவர்களின் பொருளாதாரக் கஷ்டத்தைப் போக்குவதற்கும் பயன்படுத்தப்படும்” என்று கேலரி கூறியது.
ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட கலைஞரான மனோகரின் இந்தப் படைப்புகள் – ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் நிறுவல்களை உள்ளடக்கியது. Mojarto.com-ன் படி, அங்கு அவர் சாதாரண விஷயங்களைக் காட்சி மூலம் சித்தரிக்க விரும்புகிறார்.
சமந்தா முதல் முதலில் ஓவியம் வரைந்தது எப்படி என்பதை அவரே பகிர்ந்துள்ளார். “இந்த நேரத்தில் கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வழிகாட்டவும், உதவவும் மிகவும் முக்கியமானது. இதற்கு நீங்கள் ஒரு கலைஞராக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டியதில்லை. என் கைகளில் பிரஷ் மற்றும் பெயிண்ட் இருப்பது இதுவே முதல் முறை. என்னால் வரைய முடியாது அல்லது வர்ணம் அடிக்க முடியாது என்று நினைத்தேன். இது எனக்கானது அல்ல. ஆனால், இது உங்களை வெளிப்படுத்துவதாகும். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி” என்று அவர் இன்ஸ்டாகிராமில் கேலரியால் பகிரப்பட்ட வீடியோவில் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil