ஈரான் நாட்டில் பொது இடத்தில் பெண் ஒருவர் பர்தாவை ஒழுங்காக அணியும்படி பெண் போலீசாரால் மிரட்டப்பட்டார். பதிலுக்கு அந்த பெண் செய்த செயல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஈரான் நாட்டில் இருக்கும் சட்டம் என்னவென்றால் அங்கிருக்கும் பெண்கள் கட்டாயம் பர்தா அல்லது முக்காடு அணிய வேண்டும். குறிப்பாக பொதுஇடங்களில் கட்டாயம் பர்தா அணியாமல் இருக்கவே கூடாது. கடந்த 1979ம் ஆண்டில் நிகழ்ந்த இஸ்லாமிய புரட்சியை தொடர்ந்து பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் தலையை மறைக்கும் பர்தாவை அணிவது அவசியமாகி வருகிறது.
எனினும், அண்மைக் காலங்களில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கியுள்ளதுடன், இதனை பின்பற்ற தவறும் பெண்களுக்கு அபராதம் மற்றும் சிறை என கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.இதை ஈரான் பெண்கள் சிலர் வரவேற்ற போதும், பல பெண்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். காரண, பெண்களின் உடை தான் அவர்களின் ஒழுக்கத்தினையும், அவர்களின் வெற்றியையும் தீர்மானிக்கிறது என்ற கருத்தை அங்கு வாழும் பெண்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.
சமீபத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் பொதுஇடத்தில் முகத்தை மறைக்காமல் சென்றதிற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ஈரானில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பெண்னி செயல் ஒருபக்கக் பாராட்டுக்களையும், ஒரு பக்கம் எதிர் மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் பொதுஇடத்தில் தனது தோழியுடன் அமர்ந்துள்ளார். அப்போது பெண் போலீசார் சிலர் அவரிடம் சென்று பர்தாவை ஒழுங்காக அணியும்படி அவரை மிட்டுகின்றனர். இதற்கு அந்த பெண் அவரிடம் வாதாடுகிறார்.ஆனால் அவர்கள் விடாமல் அந்த பெண்ணை மிரட்டும் தோனியில் பேசிகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், கோபத்தில் அந்த போலீசாரை பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டுவிட்டு, ஏற்கனவே தலையில் அணிந்திருக்கும் பர்தாவை தைரியமாக எடுத்துவிடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிற்அது. இதுவரை இந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.