பெரும்பாலான மக்கள் ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபியுடன் தங்கள் நாளை தொடங்க விரும்புகிறார்கள் - இந்த பழக்கம் பல ஆண்டுகளாக, ஒரு சடங்காக மாறிவிட்டது. ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த பழக்கம் உங்கள் உடலுக்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.
ஊட்டச்சத்து நிபுணர் ரோகினி பாட்டீல், இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான முந்தைய நேர்காணலில், தேநீர் சிறந்த ஆறுதல் பானமாக இருக்கலாம், ஆனால் அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உங்கள் வயிற்றை தொந்தரவு செய்யலாம் அல்லது வயிற்று அமிலங்களைத் தூண்டி உங்கள் செரிமானத்தை சீர்குலைக்கலாம்.
காலை வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து, அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும், என்று நிபுணர் கூறினார்.
இதை ஒப்புக்கொண்ட ஊட்டச்சத்து நிபுணர் கரிஷ்மா ஷா, காஃபின், இயற்கையில் ஒரு டையூரிடிக் என்பதால், நீரிழப்பை ஏற்படுத்தும் என்று விளக்கினார், தேநீர் பருகும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் உதவியாக இருக்கும் என்று பரிந்துரைத்தார்.
தேநீர் மற்றும் காபியின் PH மதிப்புகள் முறையே 4 மற்றும் 5 ஆகும், இதன் காரணமாக அவை அமிலத்தன்மையை ஏற்படுத்தும். ஆனால் இந்த பானங்களை அருந்துவதற்கு முன் அறை வெப்பநிலையில் வைத்திருக்கும் ஒரு கிளாஸ் தண்ணீரை உட்கொள்வது அமில உற்பத்தியை கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவர் கரிமா கோயல் கூறினார்,. இல்லையெனில், நீண்ட காலத்திற்கு, இது தொடரும்போது, நெஞ்சரிச்சல் அல்லது அல்சர் போன்ற நிலைகளுக்கு ஆளாகும் ஆபத்தில் நீங்கள் இருக்கலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் ருச்சிகா ஜெயின் இதை ஒப்புக்கொண்டார், மேலும் இரவு நேரத்திற்குப் பிறகு உடல் நீரிழப்புடன் இருப்பதால் காலையில் முதலில் தண்ணீர் குடிப்பதும் முக்கியம் என்று கூறினார்.
அதிகாலையில் தண்ணீர் குடித்து, உடலை நீரேற்றம் செய்வதன் மூலம் நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை மற்றும் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கலாம். மேலும் இது "குடலை சுத்தம் செய்வதன் மூலமும், குடல் இயக்கத்திற்கு உதவுவதன் மூலமும்" மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுகிறது என்று மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“