நாம் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர் கேன்கள் சீக்கிரமே பாசி பிடித்து, அழுக்காகிவிடுகின்றன. பெரும்பாலானோர் இதுபோன்ற சமயங்களில் பழைய கேனை தூக்கி எறிந்துவிட்டு, புதிய கேனை வாங்கிவிடுகிறார்கள். ஆனால், வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே தண்ணீர் கேனைப் புதிதுபோல் சுத்தப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Advertisment
ஏன் சுத்தம் செய்ய வேண்டும்?
சுத்தம் செய்யப்படாத தண்ணீர் கேன்களில் பாசி படிந்து, பச்சை நிறமாக மாறி, அடியில் அழுக்கு சேர்ந்துவிடும். சில சமயங்களில் உட்புறம் மஞ்சள் நிறமாக மாறிவிடுவதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதுபோன்ற கேன்களில் தண்ணீர் பிடித்துப் பயன்படுத்துவது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும். தண்ணீரை நிரப்புவதற்கு முன் கேனை வெறுமனே அலசுவது போதுமானதல்ல. இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது கேனை டீப் கிளீன் செய்வது மிகவும் அவசியம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
உப்பு (சாதாரண உப்பு அல்லது கல் உப்பு)
பேக்கிங் சோடா
விம் ஜெல் (பாத்திரம் கழுவும் சோப்பு)
எலுமிச்சை
சுத்தப்படுத்தும் முறை:
கேனில் உள்ள பழைய தண்ணீரை வீணாக்காமல், வடிகட்டி செடிகளுக்கு ஊற்றலாம்.
முதலில், கேனில் இருக்கும் தண்ணீரை வீணாக்காமல், செடிகளுக்கு ஊற்றிவிடுங்கள். இப்போது மூன்று டீஸ்பூன் உப்பை கேனில் போட்டு, கேன் முழுவதும் உள்ள அழுக்கு கரையுமாறு நன்கு குலுக்க வேண்டும். உப்புக்கு பதிலாக, மணல் இருந்தால் அதையும் பயன்படுத்தலாம்.
அடுத்து, இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து மீண்டும் நன்கு குலுக்கவும். இப்போது, மூன்று டீஸ்பூன் விம் ஜெல் அல்லது நீங்கள் பயன்படுத்தும் சோப் லிக்விடை சேர்த்து, இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, நன்றாகக் குலுக்கவும்.
கேனை சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும். ஊறிய பிறகு, மீண்டும் 10 நிமிடங்கள் நன்கு குலுக்க வேண்டும். இது மீதமுள்ள அழுக்குகளை நீக்க உதவும்.
இப்போது, கேனில் உள்ள நுரை கலந்த தண்ணீரை வெளியே ஊற்றிவிடவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் பிடித்து, கேனின் உட்பகுதியை நன்றாக அலசவும். வெளிப்பகுதியையும் ஸ்க்ரப்பர் கொண்டு விம் ஜெல்/சோப் லிக்விட் பயன்படுத்தி நன்கு தேய்த்து கழுவவும்.
விம் ஜெல் சேர்த்திருப்பதால், நுரை வருவது இயல்பு. நுரை முழுமையாகப் போகும் வரை, நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் பிடித்து நன்றாகக் குலுக்கி வெளியேற்ற வேண்டும்.
இப்போது உங்கள் வாட்டர் கேன் பெரும்பாலும் சுத்தமாகியிருக்கும். ஆனால் விம் ஜெல் பயன்படுத்தியதால் ஒருவித வாசம் வரலாம். அதை நீக்க, ஒரு எலுமிச்சையை எடுத்து, அதன் சாற்றை கேனில் பிழிந்து விடவும். ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, மீண்டும் நன்கு குலுக்கி கழுவவும்.
அவ்வளவுதான்! உங்கள் வாட்டர் கேன் இப்போது பளிச்சென்று, புதியது போல் பளபளக்கும். துர்நாற்றமும் இருக்காது, ஒரு புத்துணர்ச்சியான வாசனையுடன் இருக்கும். இந்த எளிய முறையில், எவ்வளவு பாசி பிடித்து, அழுக்காக இருக்கும் கேனையும் மிக எளிதாக சுத்தம் செய்யலாம்.