ஆபாச படத்தில் மூழ்கும் கணவன்.. பாதிக்கப்படும் மனைவி.. தீர்வு என்ன?

செக்ஸில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு செக்ஸ் படங்கள் பார்ப்பதில் மட்டும் எப்படி விருப்பம் இருக்கும்.

செக்ஸில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு செக்ஸ் படங்கள் பார்ப்பதில் மட்டும் எப்படி விருப்பம் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ways to get rid of porn

ஆபாச படங்களை பார்ப்பது மேற்கத்திய நாடுகளில் ஒரு சாதாரண நிகழ்வாக உள்ளது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் போர்னோகிராபி என்னும் ஆபாச படம் பார்ப்பது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த காலங்களில் இந்த மாதிரியான படங்கள் பார்ப்பது வெளிநாடுகளில் அதிகரித்து காணப்பட்டது.
ஆசிய நாடுகளில் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்தப் படங்கள் பிரபலமாக இருந்தது. குறிப்பாக போர்னோகிராபி என்னும் ஆபாச படங்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் பிரசித்தம்.

Advertisment

பொதுவாக அமெரிக்கர்கள் ஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பார்கள் என்ற ஆய்வு கருத்துகள்நிலவுகிறது. ஆனால் இந்தப் படம் பார்ப்பவர்கள் ஒருவிதமான பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆம், தற்போது மற்றொரு ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, போர்னோகிராபி படங்கள் அதிகமாக பார்க்கும் நபர்கள் தங்களின் துணையை திருப்பிப்படுத்துவதில் சிரமம்படுகின்றனர். இதனால் அவர்களின் மனைவி துன்பப்படுகின்றனர்.

இதில் இருந்து விடுபட கவுன்சிலிங் மற்றும் மனப்பூர்வ முயற்சி சரியாக இருக்கும் என செக்ஸ் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு ஆண் தனது துணையை திருப்திப்படுத்த சிரமப்படுகிறார் என்றால் அவரது மனதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
எனவே போர்னோகிராபி என்னும் ஆபாச படங்களை பார்ப்பதை விட்டுவிட்டு வேறுசில கேளிக்கை செயல்களில் ஈடுபடலாம். மனைவியுடன் மனம் விட்டு பேசலாம்.

இதெல்லாம் பிரச்னையை தீர்க்கும் காரணிகளாக உள்ளன. மேலும், செக்ஸில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு செக்ஸ் படங்கள் பார்ப்பதில் மட்டும் எப்படி விருப்பம் இருக்கும். ஆகவே இதில் இருந்து உறுதியான மனதுடன் வெளியேறுங்கள் என்று மனநல மற்றும் செக்ஸ் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: