இரவில் உறங்கச் செல்லும் போது ப்ரா அணிய வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதா?
இரவில் ப்ரா அணிவது மார்பக புற்றுநோய் மற்றும் மார்பக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால் உண்மையில் இது ஒரு கட்டுக்கதை. ப்ராவை அகற்றாமல் இரவில் தூங்குவது ஒரு பெண்ணின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கும் சரியான ஆராய்ச்சி எதுவும் இதுவரை இல்லை, என்கிறார் டாக்டர் விதி ஷா (Consultant of Breast Onco Surgery, in Mumbai’s Hiranandani Hospital)
படுக்கைக்குச் செல்லும் போது ப்ரா அணிவது மார்பகப் புற்றுநோயையோ அல்லது வேறு ஏதேனும் கடுமையான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லை. பெண்கள் ப்ரா அணிந்து இரவில் எந்த கவலையும் இல்லாமல் தூங்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
ஒருவேளை நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால், மென்மையான துணியிலிருந்து ப்ராவைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அது உங்களுக்கு நல்ல இரவு தூக்கத்தை அளிக்கும்.
மார்பக அளவு பெரிதாக உள்ள பெண்களும் படுக்கைக்குச் செல்லும் முன் மேலும் வசதிக்காக ப்ரா அணிந்திருக்க வேண்டும் என்று டாக்டர் விதி அறிவுறுத்துகிறார்.
இதைச் சொல்லும்போது, பிராக்களை வாங்கும் போது மற்றும் அணியும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.
/indian-express-tamil/media/media_files/y5driJyf0i0crdRu2VEj.jpg)
வசதியாக இருக்க வேண்டும்
கவர்ச்சியான உள்ளாடைகளில் உங்கள் பணத்தை வாரி இறைக்கும் முன், ப்ரா வசதியாக உள்ளதா இல்லையா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். ப்ரா மிகவும் இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கக்கூடாது. இது சரியாக பொருத்தமாக இருக்க வேண்டும்.
Tight straps கொண்ட ப்ராக்கள் சொறி மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும். நீங்கள் வாங்கும் உள்ளாடைகள் மென்மையான துணியால் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எப்போது தவிர்க்க வேண்டும்?
உங்கள் மார்பகங்களில் வீக்கம், சொறி, தொற்று அல்லது சீழ் போன்றவற்றை நீங்கள் கண்டால், நீங்கள் ப்ரா அணியக்கூடாது.
எரிச்சல் குணமாகும் வரை ஓரிரு நாட்களுக்கு பிரா அணிவதைத் தவிர்க்கவும். ஒருவேளை நீங்கள் வெளியில் சென்றால், சருமத்திற்கு ஏற்ற, காட்டன் ப்ராவைத் தேர்வு செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“