பொதுவாக பெண்கள் ஆடை, ஆபரணங்கள் மற்றும் அணிகலன்கள் விரும்பியாகவே இருப்பார்கள். தனது உடல்வாகுக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும் என அக்கறை காட்டுவார்கள்.
அந்த வகையில் தங்களின் ‘ப்ரா’ உள்ளிட்ட உள்ளாடைகளிலும் சிறப்பு கவனம் செலுத்துவார்கள். ஏனெனில் ஆடை மிகச் சரியாக இருந்தாலும், உள்ளாடை தேர்வு சரியாக அமையாவிட்டால் சிக்கல்தான்.
இன்றைய காலகட்டத்தில் பெண்களின் ப்ராக்கள் சந்தைகளில் நிரம்பி வழிகின்றன. புதுபுது மாடல்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. பேடு வைக்கப்பட்ட ப்ராக்கள், பேடு இல்லாத,, வயர் ப்ராக்கள் என இதனை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இந்த நிலையில் அண்மையில் பெண் மருத்துவர் தனயா, ‘பெண்கள் ப்ரா அணியாவிட்டால் மார்பகங்களில் தளர்வு ஏற்படும் என இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ஸில் தெரிவித்திருந்தார்.
பொதுவாக காலம் காலமாக பெண்களின் உடல் மற்றும் ஆரோக்கியம் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் மார்பக பாதுகாப்புக்கு ப்ராக்கள் அவசியம் என்பதாகும். இது ஒரு பெய்யான தகவல் ஆகும்.
ப்ராக்கள் அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இந்த நிலையில் பெண் மருத்துவர் தனயா தனது கருத்தை நீக்கியுள்ளார். தொடர்ந்து உடற்பயிற்சி அல்லது ஜிம் செல்லும்போது கண்டிப்பாக பெண்கள் ப்ரா அணிந்துகொள்ளலாம்.
இது உடலுக்கு நல்லது எனவும் மார்பகங்களை தொங்கவிடாது எனவும் தெரிவித்துள்ளர். மேலும் அவர் கருப்பு நிற ப்ராக்களை அணிவது உடலுக்கு நல்லது எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மார்பக அறுவை சிகிச்சை நிபுணரும் சிகாகோ ரஷ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரியா மாட்ரிரானே கூறுகையில், ‘பொதுவாக பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கு முதுகுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் எழும்.
இதுபோன்ற சூழல்களில் ப்ரா அணிவது அவர்களுக்கு சில வலிகளை போக்கும். மேலும் ப்ரா அணிவதால் மார்பு மற்றும் முதுகு வலி குறைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”