டெல்லி சுவையான உணவுக்கான இடம் மட்டுமல்ல, ஷாப்பிங்கிற்கும், குறிப்பாக திருமணங்களுக்கு குறைந்த செலவில் பொருட்கள் வாங்கவும் சிறந்த இடமாக இருக்கிறது.
நீங்கள் திருமணத்துக்கான உடைகள் வாங்க அதுவும் குறைந்த செலவில் ராம்-லீலா திரைப்படத்தில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் லெஹெங்கா அல்லது சுடியா பாடலில் கரீனா கபூரின் லெஹங்கா வாங்க வேண்டுமென்றால் நீங்கள் டெல்லி வர வேண்டியது அவசியம். நல்ல துணிமணிகள் வாங்க நாங்கள் சில இடங்களை பட்டியலிடுகிறோம்.
சாந்தினி சவுக்
திருமண லெஹங்காக்களுக்காக இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன, மேலும் அவை பிரபலமான டிசைனர் ஆடைகளையும் உங்களுக்கு வழங்குகின்றன. லெஹங்காக்கள் மட்டுமல்லாமல், ஆடை அலங்கார நவீன துப்பட்டாக்கள், கலீராக்கள், மற்றும் மணமகனின் உடைகள் போன்றவற்றையும் நீங்கள் இங்கே வாங்க முடியும்.
லஜ்பத் நகர்
இது டெல்லியின் நன்கு அறியப்பட்ட மற்றும் பழமையான ஷாப்பிங் மையமாகும். இது நியாயமான விலையில் பலவகையான பொருட்களைத் தேடும் மக்களால் அறியப் பட்ட ஒரு இடம். இங்கு எப்போதுமே கூட்டம் அலை மோதும். கவரிங் நகைகள் மற்றும் கைப்பைகள் இங்கு குறைந்த விலையில் கிடைக்கும். அலங்காரமான லெஹங்காக்களுக்கான விலை 40,000 முதல் லட்சம் வரை இங்கு இருக்கிறது.
கரோல் பாக்
கரோல் பாக், மணமகன் மற்றும் மணமகள் இருவரின் திருமண தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. பல ஆண்டுகளாக, கரோல் பாக் நவநாகரீக திருமண ஆடைகளைத் தேடும் பல பெண்களின் விருப்பமான தேர்வாக மாறியுள்ளது. உங்கள் பிறந்த நாள் அல்லது உங்கள் சிறந்த நண்பரின் திருமணத்தில் கூட அணிய சரியான ஷெர்வானியை நீங்கள் தேடும் இடம் இது தான். பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஷெர்வானிகள் முதல் ஆண்களுக்கான அனைத்து வகை உடைகளையும் நீங்கள் இங்கு குறைந்த விலையில் வாங்க முடியும்.
சவுத் எக்ஸ்டென்ஷன்
சவுத் எக்ஸ்டென்ஷனில் உள்ள சில அற்புதமான கடைகளைப் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது, அவை மணப்பெண்களுக்கு ஒரு அற்புதமான ஆடை அலங்காரத் தொகுப்பை அளிக்கின்றன. குறிப்பாக திருமண லெஹங்காக்கள் தவிரவும் நீங்கள் இங்கே பலவிதமான ஆடைகளை வாங்கலாம். பணப்பற்றாக்குறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு அனுகூலமான இடம்.
சரோஜினி நகர்
சரோஜினி நகர் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, மணப்பெண்களுக்கும் மிகவும் மலிவான தரமான ஒப்பனை பொருட்கள் மற்றும் ஆபரணங்களைப் பெறுவதற்கான சிறந்த இடமாகும். இந்த சந்தையில் உங்கள் விருப்பம் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் ஒப்பனை தயாரிப்புகளை மற்ற திருமண ஷாப்பிங் பொருட்களுடன் வாங்கலாம். இந்த சந்தைக்கு நீங்கள் வருகை தரும் முன் உங்கள் பேரம் பேசும் திறன்கள் வளர்த்துக் கொள்வது நல்லது. இங்கிருக்கும் ஒரே குறை பாடு என்று சொன்னால் இங்கு கிடைக்கும் பொருட்களுக்கு உத்தரவாதம் இருக்காது என்பது தான்.
இதனை ஆங்கிலத்தில் படிக்க Five best places in Delhi to shop for your wedding on a budget
இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - த.வளவன்