/indian-express-tamil/media/media_files/2025/09/23/download-69-2025-09-23-12-52-22.png)
தீபாவளி பண்டிகை மிக வேகமாக அணுகிக் கொண்டிருக்கும் நிலையில், பல பயணிகள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தேவையான இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஏற்கனவே முயற்சி செய்துவிட்டனர். இருப்பினும், தற்போதைய தகவலின் படி, பெரும்பாலான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுச் சென்றுள்ளன. இந்த நிலையில், பலரும் தீபாவளியைத் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். வழக்கமாக, பண்டிகை காலங்களில் இரயில் நிலையங்களில் பெரும் பயணிகளின் கூட்டம் காணப்படும். இதனை முகாமிடும் வகையில், இந்திய இரயில்வே பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சிறப்பு இரயில்கள் இயக்குவதை வழக்கமாக செய்து வருகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/29/train-xy-2025-08-29-04-59-32.jpg)
இந்த ஆண்டும் அதற்கேற்ப, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு, தெற்கு இரயில்வே பல தென் மாவட்டங்களுக்கு சிறப்பு இரயில்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய பயணத்தின் தேவையை உணர்ந்து, சென்னையிலிருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி செல்லும் மேலும் ஒரு புதிய தீபாவளி சிறப்பு இரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு இரயில், பயணிகளின் பெரும் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்தச் சேவை தொடர்ந்து அதிக தேவை உள்ள பாதைகளில் கூடுதல் சிறப்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாரந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06151) அடுத்த 4 வாரங்களுக்காக இயக்கப்படும். இதன்படி, செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13 மற்றும் 19 ஆகிய நாட்களில் இரவு 11:50 மணிக்கு இந்த சிறப்பு ரயில் புறப்படும். அடுத்த நாள் காலை 8:50 மணிக்கு மதுரையை அடைந்தபின், மதியம் 1:20 மணிக்கு கன்னியாகுமரிக்கு பயணிக்கத் தொடரும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/njRIZ2qXisENFQAOWChz.jpg)
வாராந்திர சிறப்பு ரயில் சேவை
கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06151) செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14 மற்றும் 20 ஆகிய நாட்களில் மதியம் 3:35 மணிக்கு புறப்படும். அதே நாள் இரவு 8:10 மணிக்கு மதுரையை அடைந்து, மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து சேர்ந்துகொள்கிறது.
வாராந்திர சிறப்பு ரயிலில் 2 ஏசி பெட்டிகள் ௨ ஏசி மற்றும் 3 ஏசி பெட்டிகள் 5 உள்ளன. இதுடன் கூடுதலாக 11 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள் பயன்படக்கூடிய பெட்டிகள் உள்ளன.
தென் மாவட்ட பயணிகள் பயன்பாட்டிற்கு வாராந்திர சிறப்பு ரயில்
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய முக்கிய இரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் நிறுத்தம் கொடுத்து பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/17/train-x2-2025-08-17-09-44-11.jpg)
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் தென் மாவட்டப் பயணிகள் இந்த வாராந்திர சிறப்பு ரயில்களை பயன்படுத்தலாம் என்று தெற்கு இரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us