டீன் ஏஜ் பெண்களுக்கு அதிகரிக்கும் உடல் எடை; தடுக்க இந்த 3 விஷயங்கள் முக்கியம்; டாக்டர் ஜெயரூபா
டீன்ஏஜ் குழந்தைகள் உடல் எடை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து டாக்டர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார்.
டீன்ஏஜ் குழந்தைகள் உடல் எடை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து டாக்டர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார்.
டீன் ஏஜ் பெண்களுக்கு அதிகரிக்கும் உடல் எடை; தடுக்க இந்த 3 விஷயங்கள் முக்கியம்; டாக்டர் ஜெயரூபா
பள்ளி செல்லும் பெண் குழந்தைகள், குறிப்பாக டீன்ஏஜ் பருவத்தினர், உடல் எடை அதிகரிக்கும்போது அது அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கக்கூடும். இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், தைராய்டு பிரச்னைகள் போன்ற உடல்நலக் கோளாறுகள் டீன்ஏஜ் பெண்களிடையே அதிகரித்துவருகின்றன. இந்தப் பிரச்னைகள் வெறும் உடல் உபாதைகள் மட்டுமல்ல, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன.
Advertisment
உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
உடல் எடை அதிகரிப்பு வெறும் தோற்றப் பிரச்சனை அல்ல. இது டீன்ஏஜ் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான உடல் சோர்வு அவர்களை எந்த ஒரு செயலிலும் ஈடுபட விடாமல் தடுக்கிறது. படிப்பு மற்றும் பிற செயல்பாடுகளில் கவனம் சிதறுகிறது. ஞாபக சக்தி குறைதல் தகவல்களை நினைவில் கொள்வதிலும், கற்றலிலும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். திடீர் கோபம், அதிக தூக்கம் போன்ற மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவையனைத்தும் ஒரு காலத்தில் சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் இருந்த குழந்தையை, சோர்வுற்ற மற்றும் மனக்குழப்பம் கொண்ட ஒருவராக மாற்றக்கூடும். இது அவர்களின் கல்வி, சமூக உறவுகள் மற்றும் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிக்கலாம் என்கிறார் டாக்டர் ஜெயரூபா.
இந்த பிரச்னைகளை சரிசெய்ய பெற்றோர்களின் பங்கு மிக அவசியம். உங்கள் வீட்டில் டீன்ஏஜ் குழந்தைகள் உடல் எடை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து டாக்டர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
புரதம் நிறைந்த உணவுகளை அவர்களுக்கு வழங்குங்கள். துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிருங்கள். தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் யோகா (அ) வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும். உடல் சோர்வு, ஞாபக சக்தி குறைதல் போன்ற பிரச்னைகள் வெறும் சோம்பேறித்தனத்தால் வருவதில்லை, இவை ஹார்மோன் சமநிலையின்மையின் விளைவாக இருக்கலாம் என்பதை புரியவையுங்கள். உடல் எடையை குறைப்பதன் மூலமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமும் இந்த பிரச்னைகளை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை அளியுங்கள். உங்கள் குழந்தையின் உடல்நலப் பிரச்னைகள் தீவிரமாக இருந்தால், மருத்துவ நிபுணர்களை அணுகி சரியான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம் என்கிறார் டாக்டர் ஜெயரூபா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.