கடந்த ஆண்டு இந்த நேரத்தில், மெட்ரோ காவல்துறை துணை ஆணையர் ஜிதேந்திர மணி தனது மருத்துவ அறிக்கைகள் வந்தபோது பெரும் கவலை அடைந்தார் – அவர் 129 கிலோ எடையுடன் இருந்தார், மேலும் அவருக்கு அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அப்போதுதான் ஜிதேந்திரா ஒரு புதிய தொடக்கத்தை நோக்கி ஒரு படி எடுத்தார், அதில் ஒரு நாளைக்கு குறைந்தது 15,000 அடிகள் நடப்பது மற்றும் சில கடுமையான உணவு மாற்றங்களைச் செய்வது ஆகியவை அடங்கும். இப்போது, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அவர் வெற்றிகரமாக 45 கிலோவை இழந்த பிறகு- 84 கிலோவாக இருக்கிறார்.
இது முழுக்க முழுக்க என் அலட்சியம்தான். என் மனைவி புற்றுநோயால் 2018 இல் காலமானார், இது ஒழுங்கற்ற நேரங்களில் சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க வழிவகுத்தது, என்று 49 வயதான ஜிதேந்திரா தெரிவித்தார்.

அவரது முயற்சியை பாராட்டும் விதமாக, 90,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்ட விழாவில், காவல் துறை சார்பில் அவருக்கு காவல் ஆணையர் சஞ்சய் அரோரா பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். இதனால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன் மற்றும் உந்துதல் இப்போது இன்னும் அதிகமாக உள்ளது, என்று ஜிதேந்திரா மேலும் கூறினார்.
அவர் எப்படி இதை செய்தார்?
கார்போஹைட்ரேட் இல்லாத, சர்க்கரை இல்லாத, பேக்கேஜ் செய்யப்படாத உணவு வகைகளை அவர் தேர்ந்தெடுத்தார். நான் பருப்பு, சப்ஜி, தயிர் (சாதம் அல்லது ரொட்டி இல்லாமல்) மட்டுமே சாப்பிடுவேன். எனக்கு பசி எடுக்கும் போதெல்லாம் மோர், ஆப்பிள் போன்ற பழங்களும் சாப்பிடுவேன். எனது மதிய உணவு மற்றும் இரவு உணவில் சாலட் அதிகமாக இருக்கும், பலவீனத்தைத் தவிர்க்க ஒரு ஸ்கூப் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்வேன். பசியெடுக்கும் போதெல்லாம் பழங்கள் சாப்பிடுவேன், மேலும் காபி, டீ போன்ற பானங்களுக்குப் பதிலாக தேங்காய் நீர் குடித்தேன், காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பேன். இந்த ஜூஸ் நார்ச்சத்து தொடர்பான அனைத்து மலச்சிக்கல் பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது. இது எனக்கு வேலை செய்த சிறந்த, ஆரோக்கியமான பானமாகும்.
பேக்கேஜ் செய்யப்பட்ட எதையும் சாப்பிடுவதில்லை, வெளியே சாப்பிடுவதும் இல்லை என்று பகிர்ந்து கொண்ட ஜிதேந்திரா, தனது உணவு உட்கொள்ளல் பற்றி எந்த ஊட்டச்சத்து நிபுணரையும் கலந்தாலோசிக்கவில்லை. இந்த டயட், அவரது இடுப்பில் 12 அங்குலங்களை இழக்க உதவியது மட்டுமல்லாமல், அவரது இரத்த அழுத்த அளவையும் கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவியது என்று அவர் கூறினார்.
சாப்பாடு மீதான ஆசையை எப்படி சமாளித்தார்?
எல்லாமே மனது தான், அதிக கலோரி கொண்ட உணவுகளை கைவிட வேண்டும் என்ற தனது உறுதிப்பாடு மிக உயர்ந்தது, அதனால் அலுவலக விருந்துகளை கூட தவிர்க்கிறேன். அரிதான சந்தர்ப்பங்களில் சோயா சாஸுடன் சில்லி பனீரை விரும்பிச் சாப்பிடும் ஜிதேந்திரா, முடிவுகள் தெரிவதால் அந்த உந்துதல் இன்னும் அதிகமாக உள்ளது என்றார்.
வேறு என்ன உதவியது?
ஜிதேந்திரா தினமும் 15,000 அடிகள் நடப்பதையும், சில சமயங்களில் ஒரு நாளைக்கு 20,000 அடிகளைக் கடப்பதையும் உறுதி செய்கிறார், புது டெல்லியில் உள்ள சிரி ஃபோர்ட் ஸ்போர்ட்ஸ் மைதான நடைப் பாதையில் தினமும் காலை 6.45 முதல் 9 மணி வரை நடக்கிறார்.
உங்கள் உடலைக் கேளுங்கள்; அதற்கு என்ன தேவையோ அதை நீங்களே செய்யுங்கள் என்று முடிக்கிறார் ஜிதேந்திரா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“