ஆலு பரோட்டாவை ஒரு ‘கை’ பார்க்கலாமா? ‘ஸ்லிம்’ டிப்ஸ்
Weight Loss Foods In Tamil: பருப்பு வகைகள், பயிறு வகைகள் அல்லது கொழுப்பில்லா இறைச்சி மற்றும் நிறைய காய்கறிகள் போன்ற புரதத்துடன் உணவை சமப்படுத்தவும் வேண்டும்.
Weight Loss Foods In Tamil: பருப்பு வகைகள், பயிறு வகைகள் அல்லது கொழுப்பில்லா இறைச்சி மற்றும் நிறைய காய்கறிகள் போன்ற புரதத்துடன் உணவை சமப்படுத்தவும் வேண்டும்.
weight loss foods in tamil, diet chart for weight loss for female, Fat, fat pad sign, how to calculate body fat, தொப்பை குறைய, உடல் எடை குறைய, வெயிட் லாஸ் டிப்ஸ்
Weight Loss Foods: இந்திய சாப்பாட்டில் அது மதிய சாப்பாடு, இரவு உணவு அல்லது காலை உணவுக்கான ஆலுக பரோட்டா (aloo ke paratha) என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதில் அரிசி சாதம், சப்பாத்தி அல்லது ரொட்டி ஆகியவை ஒரு முக்கியமான பங்கு வகிக்கும்.
Advertisment
ஆனால் அதிக விழிப்புணர்வு காரணமாக நமது உணர்வுகளை திட்ட உணவு (diet) ஆக்கிரமித்துள்ள நிலையில் கார்போஹைட்ரேட் உணவுகளை பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவுகளாக கருதுகிறோம். கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பது விரைவாக எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது. எனவே அரிசி மற்றும் ரொட்டி ஆகியவை ஒரு பிட்டர் உடலுக்கான உங்கள் பாதையில் குறுக்கிடும் ஒன்றாக கருதப்படுகின்றன.
Weight loss: அரிசி அல்லது ரொட்டியை எதைவேண்டுமானாலும் வரம்பிற்குள் சாப்பிடுங்கள்.
Advertisment
Advertisements
Weight Loss Diet: எது ஆரோக்கியமானது ?
கலோரிகளை எடுத்துக் கொள்வதில் ஒட்டுமொத்த குறைப்பு ஏற்படும் போது எடை குறைப்பு ஏற்படுகிறது, என Fortis மருத்துவமனை மூத்த உணவியல் நிபுணர் Anushka Baindur விளக்குகிறார். அரிசி மற்றும் சப்பாத்தி, ஆகியவற்றை ஒரே அளவுகளில் எடுத்துக் கொள்ளும்போது, அதே எண்ணிக்கையிலான கலோரிகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வழங்குகின்றன. ‘ஆகவே, ஒன்றுக்கு பதில் மற்றொன்றை தேர்ந்தெடுப்பதை விட, அரிசி சாப்பாடு அல்லது ரொட்டி எதுவாக இருந்தாலும், சாப்பிடும் அளவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்’ என அவர் விளக்குகிறார்.
இரண்டில் அதிகப்படியாக எதை சாப்பிட்டாலும் கூடுதல் கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும், இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
சமமாக உண்ணுங்கள் (balanced meal)
இரண்டிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் நார் சத்து உள்ளடக்கம் தான். அதிக நார்சத்து உள்ளடக்கம் கொண்ட உணவுகள் உங்கள் வயிறு வேகமாக நிரம்பிவிட்டதாக உணரவைக்கும். எனவே நீங்கள் குறைவாக சாப்பிடுவீர்கள். அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றில், முழு கோதுமையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, அதைத் தொடர்ந்து பழுப்பு அரிசி, அதற்கு அடுத்து வெள்ளை அரிசி.
ஆனால் அரிசியில் குறைந்த நார்ச்சத்து இருந்தாலும், அதை நிறைய காய்கறிகள் மற்றும் முழு பருப்பு வகைகளுடன் இணைப்பதன் மூலம் சமப்படுத்த முடியும். இதனால் ஒருவர் குறைந்த அளவு அரிசி சாப்பிடுவதோடு முடிப்பார். எனவே, இதன் கருத்து என்னவென்றால், அரிசி அல்லது ரொட்டியை எதைவேண்டுமானாலும் வரம்பிற்குள் சாப்பிடுங்கள். மேலும் பருப்பு வகைகள், பயிறு வகைகள் அல்லது கொழுப்பில்லா இறைச்சி மற்றும் நிறைய காய்கறிகள் போன்ற புரதத்துடன் உணவை சமப்படுத்தவும் வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"