How White Rice Helps in Weight Loss: உடலை குறைக்க வேண்டும் என்றால், முதலில் அனைவரும் ஒருசேர சொல்வது அரிசியை அவாய்ட் செய்ய வேண்டும் என்பதே. 'சாதம் சாப்பிடுவதை குறைத்தாலே, வெயிட் தன்னால குறைந்துவிடும்' என்று தான் சொல்வார்கள். ஆனால், உண்மையில் அரிசியை கொண்டு உடல் எடையை குறைக்க முடியும். அது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
பெரும்பாலான டயட் முறைகள், அளவுக்கு அதிகமான கலோரிகள் கொண்ட உணவுகளை தவிர்க்க சொல்வதில் தான் முனைப்பாக இருக்கும். பொதுவாக, எடையை குறைக்க வேண்டுமெனில், எவ்வளவு கலோரி கொண்ட உணவு சாப்பிடுகிறோமோ, அதனை எரிக்கும் அளவுக்கு வேலை செய்யவேண்டும். அதனால் தான், அரிசியை பெரும்பாலானோர் டயட்டில் சேர்ப்பதில்லை. அரிசியில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளது.
அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா? இத்தனை நாள் தெரியாம போச்சே!
அதற்காக, உங்கள் டயட்டில் இருந்து நீங்கள் அரிசியை நீக்க வேண்டுமா? தேவையே இல்லை. அரிசி குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட உணவு, எளிதில் செரிமானமாகும். வைட்டமின் B நிறைய உள்ளது.
ஆகவே, நீங்கள் தினம் தாராளமாக சாதம் சாப்பிடலாம். அரிசியை குக்கரில் வைப்பதைத் தவிர்த்து, முடிந்த அளவு வடித்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். உங்கள் செரிமானம் இன்னும் வேகமாக இருக்கும்.
உங்கள் வேலை முறை உட்கார்ந்தே செய்வது என்றால், தினம் மதியம் 1 கப் சாதம் சாப்பிடுங்கள். அதனுடன் காய்கறி அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பசி விரைவில் அடங்கிவிடும். ஒரு கப்புக்கு மேல் சாப்பிடுபவராக இருந்தால், அன்று மாலையே ஒரு லாங் வாக் போயிட்டு வந்துடுங்க. சாப்பிட்ட அளவிற்கான கலோரியை எரிக்க வேண்டும், அவ்வளவு தான். மூணு கப் ரைஸ் சாப்பிட்டாலும் பிரச்சனை கிடையாது. ஆனால், அதற்கேற்ப உடல் உழைப்பு தேவை.
ஓடியாடி செய்யும் வேலை உங்களது என்றால், ஒரு கப் அரிசியெல்லாம் உங்களுக்கு சுத்தமாக பத்தாது. விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். ஆகவே, 2-3 கப் சாதம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அன்றைய நாள் ஓய்வில் இருந்தால், நிச்சயம் அளவை குறைக்க வேண்டும்.
இறுதியாக, நீங்கள் எவ்வளவு தான் சாதம் சாப்பிட்டாலும் பிரச்சனை இல்லை. அதே அளவிலான கலோரியை உங்கள் உடலில் இருந்து எரித்துவிட்டால், ஒரு கிலோ கூட உங்கள் வெயிட் ஏறாது. தவிர, இதுநாள் வரை சரியான விகிதத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் உடல் எடையை அதிகரித்து வைத்திருக்கும் உங்களுக்கு, இந்த அரிசி டயட் நிச்சயம் எடை குறைப்பில் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.