weight loss diet tips fenugreek seeds cardamom benefits : இந்திய மக்களின் சமையல் கலாசாரத்தில் இருக்கும் பொருட்கள் ஒரு புதையல்களைப் போன்றது. உடல் நலத்திற்கும் ஏற்ற பல பொருட்கள் அந்த சமைக்க அறைகளில் இருக்கும். நிறைய மருத்துவக்குணங்கள் கொண்ட சமையல் பொருட்களை அதன் பயன்கள் தெரியாமலேயே சுவைக்காக மட்டும் பயன்படுத்துகிறோம்.
நாம் பயன்படுத்தும், ஹெர்பல்ஸ், வேர்கள், காய்கள், பழங்கள், பெர்ரிகள் மற்றும் கீரைகள் ஏகப்பட்ட பலன்களை நமக்குத் தருகிறது என 'Healing Foods'என்ற புத்தக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் கிருமிகளை அழிப்பது முதல் செரிமானம் வரை நமக்கு பல நன்மைகளை செய்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஹெல்தியான செரிமானம் மட்டுமே உடல் எடையைக் குறைக்க உதவும். உடல் எடை குறைக்கும் போது, இந்த 2 ஸ்பைஸ்களை நினைவில் கொள்ளவேண்டும். அதுதான் ஏலக்காய் மற்றும் வெந்தயம். இந்த இரண்டு பொருட்களும் பலவிதமான சமையல்களுக்கு நாம் பயன்படுத்துகிறோம்.
ஏலக்காய் மற்றும் வெந்தயம் ஆகியவை, உடனடியாக எந்த பாதிப்பும் இன்றி உடல் எடையைக் குறைக்கலாம்.
ஏலக்காய் செரிமானத்தை சரிசெய்து, மெட்டபாலிசத்தைத் தூண்டி கொழுப்புகளை கரைக்க உதவுவதாக Healing Foods' புத்தகத்தில், குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த இரண்டு ஸ்பைஸ்களிலும் நார்ச்சத்து நிரம்பியுள்ளதால் பசியுணர்வைக் கட்டுப்படுத்துகிறது.
ஏலக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட்ஸ் அழற்சியைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். வெந்தயம் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். ஏலக்காயை டீ-யில் மட்டுமே கலந்து குடிக்காமல் இறைச்சியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
வெந்தயத் தண்ணீரை டீடாக்ஸ் ட்ரிங்க்ஸாகவும் குடிக்கலாம். சர்க்கரையை கட்டுப்படுத்தும். வெந்தயத்தை ஊற வைத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
மேலும் படிக்க : Hair Growth: பச்சைக் கீரை, பழக் கூழ், கேரட்… கூந்தல் வளர்ச்சிக்கு எளிய உணவுகள்