கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக, மக்கள் தற்போது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தற்போது சிறிதுசிறிதாக அவர்கள் வெளியில் இருந்து உணவுப்பொருட்களை வாங்க துவங்கியுள்ளனர். துரித உணவுகள் எப்போதும் நன்மை பயப்பதில்லை. தற்போதைய நிலையில், துரித உணவுகள் விற்பவர்களும் மக்களை ஏமாற்றும் நோக்கத்திலேயே செயல்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, நமது உடலின் எடை திடீரென்று அதிகரிப்பது மட்டுமல்லாது பல்வேறு உடல் உபாதைகள் வரவும் காரணமாக அமைந்து விடுகிறது. இந்நிலையில், நமக்கு ஆபாந்பாந்தவனாக உள்ளது உலர்திராட்சை தான்.
ஊரடங்கு காரணமாக வேலைப்பளு இல்லாததால், பலரின் உடல் எடை கணிசமாக அதிகரித்திருக்கும். உடல் எடை குறைப்பு என்று ஊடகங்களில் ஒளிபரப்பாகும் பல்வேறு பயிற்சிகளுக்கு போய், பணத்தை விரயமாக்காமல், உலர் திராட்சை உள்ளிட்டவைகளை சாப்பிட்டு வந்தாலே, உடல் எடை குறைப்பு விவகாரத்தில், வெற்றி பெறலாம்.
சிறிது உலர் திராட்சையை வாயில் போட்டு மெதுவாக சுவைக்க துவங்குங்கள். மெதுவாக தின்னும் நிகழ்வு. உங்கள் மனைத மகிழ்விக்கச்செய்யும். இது உங்கள் உடலையும், மனதையும் சாந்தப்படுத்தும். சிறிது உலர்திராட்சையை, குறைந்தது 5 நிமிடங்கள் வரை வாயில் வைத்து சுவைக்க வேண்டும்.
உலர் திராட்சை, ஹெல்த்தியான சிற்றுண்டி ஆகும். இதை சாப்பிடுவதால், நமது உடலில் வேதிவினைகள் தூண்டப்பட்டு, சுவாசம் சீராகும். பசி கட்டுப்படுத்தப்படும். ஜீரணம் சீராகும், இதன்காரணமாக தேவையற்ற மனஅழுத்தம் குறையும்.
உலர் திராட்சையை காலை, மாலை என்று இல்லாமல், நாம் விரும்பும் நேரத்தில் மென்று திங்கலாம்.மற்ற உணவுகளை காட்டிலும், உலர்திராட்சை, அதிக சத்துக்களை கொண்டது மட்டுமல்லாது மனதளவிலும் மிகுந்த நன்மை பயக்கவல்லது.
உலர் திராட்சையில், வைட்டமின்கள், இயற்கை சர்க்கரை அதிகளவில் உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாம் சாப்பிடும்போது கிடைக்கும் சத்து, உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிடும்போது கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.