ஒருமுறை இந்த கஞ்சியை செய்து குடியுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து- 1 டம்ளர்
பச்சரிசி கால் டம்ளர்
தண்ணீ 2 கப்
உப்பு கொஞ்சம்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
பொடித்த பனை வெல்லம் – 3ஸ்பூன்
செய்முறை : கருப்பு உளுந்தை நன்றாக கழுவ வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து பச்சரிசியை நன்றாக கழுவி, வறுக்க வேண்டும். இரண்டையும் பொடியாக அரைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு கப் தண்ணீரில் இந்த பொடியை கரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து இந்த கலந்த பொடியையும் சேர்க்கவும். நன்றாக கலந்துவிடவும். தொடர்ந்து இதில் தேங்காய் துருவலை சேர்த்து கிளரவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். தொடர்ந்து பனை வெல்லத்தை சேர்த்து கிளரவும்.