Weight loss, Weight loss seeds, Abdominal obesity, belly fat, how to control belly fat, உடல் எடை, உடல் எடை குறைய
:Weight loss seeds: உடல் எடையை குறைப்பது என்பது நம்மில் பெரும்பாலோருக்கு ஒருபோதும் முடிவடையாத போராக இருக்கலாம். உடற்பயிற்சி கூடத்துக்கு செல்வது ஒரு தீர்வாக இருக்கலாம் ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமான ஒரு தீர்வாக இருக்காது. இது தவிர, உடல் எடையை குறைக்க உதவும் பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று, விதைகள் குறித்து அறிந்துகொள்வதும் அவற்றின் நன்மைகளைப் பற்றி தெரிந்திருப்பதும்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Chia Seeds
Advertisment
Advertisements
இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்து நன்மைகள் உள்ளன மற்றும் கலோரிகளும் குறைவாக உள்ளன. உடல் பருமனை கட்டுப்படுத்துவதோடு, பசி வேதனையைக் கட்டுப்படுத்தவும், எடையை நிர்வகிக்கவும் இவை உதவுகின்றன.
Flax Seeds
ஆளி விதைகளில் (Flax Seeds) இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது முதல் செரிமானத்திற்கு உதவுவது வரை மக்கள் அதன் நன்மைகளைப் பற்றிக் கூறுகிறார்கள். இது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆளி விதைகளில் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை அதிகரிப்பிற்கு அஞ்சாமல் தவறாமல் உட்கொள்ள இது ஒரு சிறந்த தேர்வு.
புரதங்கள், கார்போஹைட்ரேட், நார்சத்து மற்றும் அத்தியாவசிய கொழுப்புகள் நிரம்பி உள்ள சப்ஜா விதைகளும் எடை குறைப்புக்கு உதவுகின்றன. இந்த விதைகளில் அதிக அளவு உள்ள Omega-3 கொழுப்பு அமிலங்கள் (fatty acids) உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் metabolism அதிகரிக்க உதவும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இது உங்கள் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை அதிக நேரம் இருக்க செய்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil