தொப்பை வர காரணமே இதுதான்… உடனே இதை குறைங்க; டாக்டர் ஷர்மிகா
உடல் எடை அதிகரிப்பு என்பது பலரின் கவலையாக உள்ளது. அதிலும் குறிப்பாக, அடிவயிற்றில் சேரும் கொழுப்பைக் குறைக்க பலரும் சிரமப்படுகின்றனர். ஏன் அடிவயிற்றில் கொழுப்பை சேமிக்கப்படுகிறது, அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிப்பு என்பது பலரின் கவலையாக உள்ளது. அதிலும் குறிப்பாக, அடிவயிற்றில் சேரும் கொழுப்பைக் குறைக்க பலரும் சிரமப்படுகின்றனர். ஏன் அடிவயிற்றில் கொழுப்பை சேமிக்கப்படுகிறது, அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
தொப்பை வர காரணமே இதுதான்… உடனே இதை குறைங்க; டாக்டர் ஷர்மிகா
உடல் எடை அதிகரிப்பு என்பது பலரின் கவலையாக உள்ளது. அதிலும் குறிப்பாக, அடிவயிற்றில் சேரும் கொழுப்பைக் குறைக்க பலரும் சிரமப்படுகின்றனர். ஏன் அடிவயிற்றில் கொழுப்பை சேமிக்கப்படுகிறது, அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
Advertisment
உடலின் செல்களுக்கு எப்போதும் இயல்பான அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு அந்த ஆற்றலை வழங்குகிறது. பொதுவாக, ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிடுவது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. ஆனால், பலரும் தேவைக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளும்போது பிரச்னை தொடங்குகிறது. உதாரணத்திற்கு, சாதம், சர்க்கரை, மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிடும்போது, செல்கள் அந்த அதிகப்படியான கார்போஹைட்ரேட்டை ஏற்றுக்கொள்ளாது.
செல்களால் நிராகரிக்கப்படும் இந்த அதிகப்படியான கார்போஹைட்ரேட், பிறகு கொழுப்பாக மாற்றப்படுகிறது. இந்தக் கொழுப்பு முதலில் அடிவயிற்றுப் பகுதியில் சேமிக்கப்பட்டு, தொப்பையாக மாறுகிறது. ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து மதிய உணவில் சாதம் அதிகமாக சாப்பிடும் ஒருவருக்கு, தொப்பை அதிகரிக்க இதுவே முக்கியக் காரணம்.
கொழுப்பைக் குறைக்கும் வழிகள்: பெரிய வயிற்றை இயல்பாகக் கருதுவது தவறு. அதை சரியான முறையில் நிர்வகிப்பது அவசியம். உங்கள் உணவில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இது பசியைக் கட்டுப்படுத்துவதுடன், கொழுப்பு சேருவதையும் குறைக்கும்.
Advertisment
Advertisements
பசி உணர்வு ஏற்படும்போது மட்டுமே சாப்பிடுங்கள். தேவையில்லாமல் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அடிவயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைக்க, தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது வயிற்றுக்கான பிரத்யேகப் பயிற்சிகளை (Abdominal Workouts) செய்யுங்கள். இது அடிவயிற்று தசைகளை வலுப்படுத்தி, கொழுப்பைக் கரைக்க உதவும் என்கிறார் டாக்டர் ஷர்மிகா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.