எடை இழப்பு அதிக பலன்களை கொண்டுள்ளது, ஆனால் இது தளர்வான தொளதொள தோல் போன்ற சில சிக்கல்களையும் கொண்டுள்ளது.
இதை சரியசெய்ய வழி என்ன? உங்கள் உடற்பயிற்சியை நிறுத்துவதற்குப் பதிலாக, தொளதொள சருமத்தை டோனிங் செய்யும் அதே வேளையில் உங்கள் இலக்குகளை அடையும் சில பயிற்சிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
எப்படி என்று கேட்கிறீர்களா?
ஊட்டச்சத்து நிபுணரும் யோகா பயிற்சியாளருமான ஜூஹி கபூர் சில பயிற்சிகளைப் பகிர்ந்துள்ளார்.
எடை குறைத்த பிறகும், தளர்வான சருமம் மிகவும் தொந்தரவு செய்கிறது. கொழுப்பு எரித்தல், தசை தொனி மற்றும் மந்தமான சருமத்திற்கான மூன்று பயிற்சிகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம், என்று கபூர் கூறினார்.
வீடியோ
மலாசன நடை (Malasana walk)
எப்படி நாம் நின்றவாறு நடக்கிறோம். அதேபோல இதில் தரையில் குந்தியவாறு நடக்க வேண்டும்.
இந்த பயிற்சி இடுப்பு மற்றும் தொடைகளில் கவனம் செலுத்துகிறது. கணுக்கால் மற்றும் முழங்கால்களையும் பலப்படுத்துகிறது. ஆனால் உங்களுக்கு முழங்கால் வலி இருந்தால் இந்த பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.
எத்தனை சுற்றுகள்?
5 சுற்றுகள் (ஒவ்வொரு சுற்றுக்கும் 45 வினாடிகள்)
பிளாங்க் (Plank)
இது உங்கள் மையப் பகுதியை வலுப்படுத்தும், அதைச் சுற்றியுள்ள தசைகளை இறுக்கமாக்கும்.
கர்ப்பம் மற்றும் மாதவிடாய் ஏற்பட்டால் இந்த பயிற்சி செய்வதை தவிர்க்கவும். என்று கபூர் கூறினார்.
எத்தனை சுற்றுகள்?
3 சுற்றுகள் (ஒவ்வொரு சுற்றுக்கும் 60 வினாடிகள்)
தேவி போஸ் (Goddess pose)
இது உள் தொடைகள் மற்றும் குவாட்ஸை குறிவைக்க உதவுகிறது.
எத்தனை சுற்றுகள்?
10 சுற்றுகள் (ஒவ்வொரு சுற்றுக்கும் 30 வினாடிகள்)
முழங்கால் வலி ஏற்பட்டால் தவிர்க்கவும் என்றார் கபூர்.
இத்தகைய பயிற்சிகள் ஆரம்பத்தில் உதவக்கூடும். ஆனால் தளர்வான சருமத்தைத் தவிர்க்க, ஸ்ட்ரென்த், ரெசிஸ்டன்ஸ் அல்லது எடைப் பயிற்சிகளை உங்கள் எடைக் குறைப்புப் பயிற்சியில் இணைப்பது முக்கியம் என்று லைஃப்ஸ்டைல் கோச் சுவிதி ஜெயின் கூறினார்.
அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் அதிகபட்ச கொழுப்பை இழக்கும்போது தசைகளை தக்க வைத்துக் கொள்ளலாம், இதன் விளைவாக ஒரு கட்டுக்கோப்பான உடலமைப்பு கிடைக்கும்.
ஸ்ட்ரென்த் பயிற்சி, தசையை உருவாக்குவது மட்டுமல்லாமல், இணைப்பு திசுக்களையும் பலப்படுத்துகிறது, இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் தளர்வான தோலின் தோற்றத்தை குறைக்கிறது, என்று ஜெயின் மேலும் கூறினார்.
நீங்கள் எடை இழக்கும்போது, உங்கள் தோல் தளர்வாகவும் தொய்வுற்றதாகவும் தோன்றுவதை விட அடியில் உள்ள தசைகளின் வடிவத்தை எடுக்கும்.
உங்கள் தசைகள் அனைத்துக்கும் வேலை கொடுப்பது முக்கியம், அவை அணிதிரட்டப்படுவதை உறுதிசெய்து தசை உருவாக்க தூண்டுகிறது. உங்கள் உணவில் நல்ல புரதங்களை உட்கொள்வதன் மூலம் தசை வளர்ச்சிக்கு உதவலாம், என்று சுவிதி ஜெயின் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“