/indian-express-tamil/media/media_files/2025/05/15/a4Rf0CQ1y5MdwveavQi5.jpg)
வயிற்றை சுற்றி எக்ஸ்ட்ரா கொழுப்பு? அதிகம் சேராமல் தடுக்கும் இந்த ஃபுட்ஸ்: உணவியல் நிபுணர் தாரிணி டிப்ஸ்
இன்றைய உலகில், உடல் பருமன் பிரச்னைகள், குறிப்பாக குழந்தைகளிடையே அதிகரித்து வருவது, சாப்பிடும் உணவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. நம் அன்றாடம் 5 விதமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் உணவியல் நிபுணர் தாரிணி.
1. வண்ணமயமான காய்கறிகள்:
சிவப்பு: தக்காளி, தர்பூசணி, கொய்யா மற்றும் திராட்சை பழங்கள்- ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் ஏ,சி, மற்றும் கே 1 நிறைந்துள்ளது. அதனால், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், இதய ஆரோக்கியம், சரும பாதுகாப்பு மேம்படும். அதோடு, சில புற்றுநோய்களின் ஆபத்தை குறைக்கலாம்.
ஆரஞ்சு: கேரட், கேப்சிகம், கொடை மிளகாய், பரங்கிக்காய்-நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உங்கள் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், இதய ஆரோக்கியம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க்கிறது.
பச்சை: கீரை, பாவக்காய், ப்ரோக்கோலி, பட்டர் ஃப்ரூட், பீன்ஸ், பச்சை பயறு, பூசணி, புடலைங்காய், முட்டைகோஸ்-நார்ச்சத்து, ஃபோலேட், வெளிமம் (மக்னீஷியம்), பொட்டாசியம், வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) மற்றும் வைட்டமின் கே1 நிறைந்துள்ளது. இதனால், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் கிடைக்கும், அதோடு புற்று நோய், இதய நோய் அபாயத்தை நீக்கலாம்.
வெள்ளை: காலிஃபிளவர், பூண்டு, வெங்காயம், காளான்கள், முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கு - இதில், நார்ச்சத்து, ஃபோலேட், வெளிமம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் B6 மற்றும் கே1 நிரம்பியுள்ளது. இது, அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கவும், ஆக்ஸிஜனேற்றம் தரவும், உங்கள் பெருங்குடல் மற்றும் பிற புற்றுநோய்களின் ஆபத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யவும் உதவும்.
2.பழங்கள்: குழந்தைகளுக்கு சிறுவயது முதலே இயற்கை இனிப்புகள் வழங்க வேண்டும். பழங்களில் இனிப்பு, வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. பருவகால பழங்களை தேர்ந்தெடுத்து கொடுக்கலாம். மாம்பழங்கள், தர்பூசணி, நொங்கு, போன்றவற்றை தினசரி உணவில் சேர்ப்பது இயற்கையான ஆற்றலை வழங்குகிறது.
3. தானியங்கள்: தானியங்கள் ஆற்றலின் முக்கிய ஆதாரம், சரியான வகைகளைத் தேர்ந்தெடுப்பது எடை மேலாண்மையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். தீட்டப்படாத அரிசி வகை மற்றும் சிறுதானியங்கள் எடுக்கலாம். சிறு தானியங்கள் திணை, சாமை, கம்பு, வரகு, குதிரைவாலி, கேள்வரகு போன்ற தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.
4. புரதம்: புரதம் நமது உடலின் கட்டுமானத் தொகுதி, தசை பழுது மற்றும் வளர்ச்சிக்கு அவசியம். பருப்பு வகைகள், கொண்டை கடலை போன்ற சைவ உணவு விருப்பங்களிலிருந்தோ அல்லது மீன், கோழி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவு விருப்பங்களிலிருந்தோ புரதச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. பால்: பால் அத்தியாவசிய கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பெரியவர்களுக்கு, ஒரு நாளைக்கு சுமார் 400 மில்லி பால் பரிந்துரைக்கப்படுகிறது. பதின்வயதினர், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிக அளவு தேவைப்படுகிறது. கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த முடிந்தவரை குறைந்த கொழுப்புள்ள விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க அறிவுறுத்துகிறார் உணவியல் நிபுணர் தாரிணி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.